ஹோம் » போடோகல்லெரி » தொழில்நுட்பம் » Flipkart Big Saving Days Sale விற்பனையில் எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி.?

Flipkart Big Saving Days Sale விற்பனையில் எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி.?

Flipkart Big Saving Days Sale | பிளிப்கார்ட்'இன் பிக் சேவிங் டே சிறப்பு விற்பனையில் கட்டணமில்லா இஎம்ஐ, மொபைல் புரொடெக்ஷன், சிறந்த எக்சேன்ஞ் டீல் ஆகிய ஏராளமான சலுகைகள் உள்ளன. இந்த பிளிப்கார்ட் பிக் சேவிங் டே விற்பனையில் எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

 • 17

  Flipkart Big Saving Days Sale விற்பனையில் எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி.?

  பிளிப்கார்ட்'இன் பிக் சேவிங் டே சிறப்பு விற்பனை தற்போது துவங்கியுள்ளது. இந்த வாரம் முழுவதும் இந்த அதிரடி விற்பனை நேரலையில் இருக்கும். இது மே 8 அன்று முடிவடைகிறது. இந்த விற்பனையானது பல்வேறு பிரிவுகளில் உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு அதிக தள்ளுபடியை கொண்டுள்ளது. இதில் கட்டணமில்லா இஎம்ஐ, மொபைல் புரொடெக்ஷன், சிறந்த எக்சேன்ஞ் டீல் ஆகிய ஏராளமான சலுகைகள் உள்ளன. இந்த பிளிப்கார்ட் பிக் சேவிங் டே விற்பனையில் எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 27

  Flipkart Big Saving Days Sale விற்பனையில் எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி.?

  ஆப்பிள் ஐபோன் 12: ஐபோன் 12 ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் பிக் சேவிங் டே விற்பனையில் வங்கி தள்ளுபடிகள் உட்பட 50,000 ரூபாய் வரை சிறப்பு சலுகைகள் கிடைக்கும். அதன்படி இதன் ஆரம்ப விலை ரூ.49,999 ஆக உள்ளது. இந்த மாடல் ஸ்மார்ட்போன் முதன்முதலில் 2020 ஆண்டில் அறிமுகமானாலும், இது இன்றளவும் மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. இது சிறந்த ஸ்மார்ட்போன் கேமரா செயல்திறனை வழங்குகிறது, இந்த பிரிவில் உள்ள பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களை விடவும் இது பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. ஐபோன் 12-இல் A14 பயோனிக் 5ஜி சிப்செட், சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே, ஃபிளாக்ஷிப் 12 MP டூயல் கேமரா வசதி, தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங் போன்ற பல விஷயங்களை இது கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 37

  Flipkart Big Saving Days Sale விற்பனையில் எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி.?

  ஆப்பிள் ஐபோன் 12 மினி: ஃபிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் ஆப்பிள் ஐபோன் 12 மினி போனை, ​​வங்கி தள்ளுபடிகளை பயன்படுத்தி ரூ.50,000-க்கு கீழ் பெற்று கொள்ளலாம். ஐபோன் 12 ஆனது அனைத்து வங்கி சலுகைகளையும் சேர்த்து ரூ.42,999 ஆரம்ப விலையாக உள்ளது. இந்த ஐபோன் 12 மினி ஸ்மார்ட்போன் ஐபோன் 12 மாடலில் உள்ள அனைத்து வசதிகளையும் வழங்குகிறது. ஆனால் இவை அனைத்தும் சிறிய பேக்கேஜில் கிடைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 47

  Flipkart Big Saving Days Sale விற்பனையில் எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி.?

  மோட்டோரோலா எட்ஜ் 20 5ஜி: இந்த ஸ்மார்ட்போனாது ரூ.24,999-க்கு பிளிப்கார்ட் பிக் சேவிங் விற்பனையில் கிடைக்கிறது. மோட்டோ G20 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகமான, மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். மோட்டோ எட்ஜ் 20 5ஜி ஆனது 108 MP முதன்மை சென்சார், 16 MP அல்ட்ராவைட் கேமிரா மற்றும் 8 MP டெலிஃபோட்டோ யூனிட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது இந்த பிரிவில் மிகவும் நம்பகமான கேமரா அமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போனாக உள்ளது. மேலும் இதில் 144Hz FHD+ AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 778G SoC, நியர்-ஸ்டாக் ஆண்ட்ராய்டு மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 57

  Flipkart Big Saving Days Sale விற்பனையில் எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி.?

  மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன்: 20 ஆயிரத்தில் ஸ்டாக்-ஆண்ட்ராய்டு அனுபவத்தை தர கூடிய ஸ்மார்ட்போன் வேண்டுமென்றால், மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் சிறந்த தேர்வாக இருக்கும். மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 800U SoC, 90Hz AMOLED டிஸ்ப்ளே, 108 MP டிரிபிள்-கேமரா வசதி மற்றும் 5,000 mAh பேட்டரி ஆகிய சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனை ரூ.18,999-க்கு தள்ளுபடி விலையில் பெறலாம்.

  MORE
  GALLERIES

 • 67

  Flipkart Big Saving Days Sale விற்பனையில் எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி.?

  ரியல்மி 9i: பிளிப்கார்ட்'இன் இந்த பிக் சேவிங் டே விற்பனையில், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிச் சலுகைகளைப் பயன்படுத்தி பல தள்ளுபடிகளை பெறலாம். அந்த வகையில் ரியல்மி 9i ஸ்மார்ட்போனையும் அதிக தள்ளுபடியில் பெற முடியும். இதில் ஸ்னாப்டிராகன் 680 SoC சிப்செட், 5000 mAh பேட்டரி, 50 MP கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பு மற்றும் பல அதிரடி அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த போனை தள்ளுப்படி விலையில் ரூ.12,499-க்கு பெறலாம்.

  MORE
  GALLERIES

 • 77

  Flipkart Big Saving Days Sale விற்பனையில் எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி.?

  ரெட்மீ 10: இந்த ரெட்மீ ஸ்மார்ட்போனுக்கு சிறப்பு தள்ளுபடிகளுடன், கூடுதல் வங்கிச் சலுகைளும் வழங்குகின்றனர். ரெட்மி 10 மாடல் இந்தியாவில் ரூ.10,000-க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது ஸ்னாப்டிராகன் 680 SoC சிப்செட், 50 MP டிரிபிள்-கேமரா அமைப்பு, 6000 mAh பேட்டரி மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது. இதன் தள்ளுபடி விலை ரூ.9,999 ஆகும்.

  MORE
  GALLERIES