முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » Chatgpt-க்கு போட்டியாகக் களமிறங்கும் சீன செயற்கை நுண்ணறிவு பாட் சேவை..!

Chatgpt-க்கு போட்டியாகக் களமிறங்கும் சீன செயற்கை நுண்ணறிவு பாட் சேவை..!

Chatpgpt | கவிதை எழுதுவது, பயிற்சிக்கான ஆவணங்களை தயார் செய்வது முதல் கோடிங் எழுதி கொடுப்பது, வீட்டுப் பாடங்கள் செய்வது என்று நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் chatgptயிடம் துல்லியமான பதில் கிடைக்கும்.

 • 16

  Chatgpt-க்கு போட்டியாகக் களமிறங்கும் சீன செயற்கை நுண்ணறிவு பாட் சேவை..!

  கடந்த சில வாரங்களாக chatgpt என்ற செயற்கை நுண்ணறிவு பற்றிய தகவல் தான் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. நவம்பர் மாதம் அறிமுகமான chatgpt பல ஆண்டுகளாக கோலோச்சி வரும் கூகுள் தேடலுக்கே சவாலாக இருக்கிறது என்று நிபுணர்கள் கூறும் அளவுக்கு என்ன தகவல் வேண்டுமானாலும் துல்லியமாக தரமுடியும் என்ற ரீதியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 26

  Chatgpt-க்கு போட்டியாகக் களமிறங்கும் சீன செயற்கை நுண்ணறிவு பாட் சேவை..!

  செயற்கை நுண்ணறிவு தளங்கள், பாட்கள் என்று பல வகையான செயலிகள் உருவாக்கப்பட்டு வந்தாலும் chatgpt தான் இந்தப் போட்டியில் முதலிடத்தில் இதுவரை இருந்து வருகிறது. இந்நிலையில் சீனாவின் இன்டெர்நெட் சேர்ச் என்ஜினான பைடு, ஒரு செயற்கை நுண்ணறிவை உருவாக்கி வருவதாகவும், இது chatbot சேவையாக அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்

  MORE
  GALLERIES

 • 36

  Chatgpt-க்கு போட்டியாகக் களமிறங்கும் சீன செயற்கை நுண்ணறிவு பாட் சேவை..!

  கவிதை எழுதுவது, பயிற்சிக்கான ஆவணங்களை தயார் செய்வது முதல் கோடிங் எழுதி கொடுப்பது, வீட்டுப் பாடங்கள் செய்வது என்று நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் chatgptயிடம் துல்லியமான பதில் கிடைக்கும். கேட்கப்படும் கேள்விகளுக்கு மனிதர்கள் கூறுவதை போல பதில் கொடுப்பது தான் Chatgptயின் சிறப்பம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாஃப்ட் சமீபத்தில் chatgptக்கு சேட் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் மார்ச் மாதத்தில் இதற்கு போட்டியாக சீனாவில் ஒரு chatbot சேவை அறிமுகம் செய்யப்படும்.

  MORE
  GALLERIES

 • 46

  Chatgpt-க்கு போட்டியாகக் களமிறங்கும் சீன செயற்கை நுண்ணறிவு பாட் சேவை..!

  ரியூட்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, சீனாவின் மிகப்பெரிய டெக் நிறுவனமான பைடு முதலில் இந்த செயற்கை நுண்ணறிவை ஒரு தனிப்பட்ட அப்ளிகேஷனாக அறிமுகம் செய்யும் என்றும் கொஞ்சம் கொஞ்சமாக சீனாவின் சர்ச் என்ஜினுடன் இது இணைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.தற்போது chatgpt எவ்வாறு செயல்படுகிறதோ, அதே போல யூசர்களின் கேள்விகளுக்கு வலைத்தள இணைப்புகளை வழங்காமல், பதில்களை வழங்கும் என்று பைடு நிறுவனம் தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 56

  Chatgpt-க்கு போட்டியாகக் களமிறங்கும் சீன செயற்கை நுண்ணறிவு பாட் சேவை..!

  சீனாவில் ஏற்கனவே இருக்கும் சாட்பாட்கள் அனைத்துமே யூசர்களுடன் உரையாடுவதில் தான் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் chatgptயைப் பொறுத்தவரை உரையாடல், தேடல்கள், கேள்விகளுக்கான பதில்கள் என்பதை தவிர்த்து தொழில்ரீதியான பல்வேறு விஷயங்களையும் மேம்பட்ட முறையில் செய்து வருகிறது. உதாரணமாக ஏற்கனவே கூறியுள்ளது போல, கோடிங் எழுதுவது, கட்டுரை எழுதுவது, கோடிங்கில் இருக்கும் தவறுகளை கண்டுபிடிப்பது, புரோகிராம் செய்வது என்று மனிதர்களை போல செயல்பட்டு வருகிறது. ஒரே ஒரு செயற்கை நுண்ணறிவு பல அவதாரங்களை எடுத்து பலவிதமாக பதில் கூறுவது போலவே, தேடல் எஞ்சினை போலவும் செயல்படும், மனிதர்களை போலவும் பதிலளிக்கும், தேர்ந்த டேட்டா என்ஜினியர் போல தகவல்களை துல்லியமாக தரும், சாப்டுவேர் அறிவு இருக்கிறது, அதேபோல கிரியேட்டிவ்வாக கதைகளையும் எழுதி கொடுக்கும்.

  MORE
  GALLERIES

 • 66

  Chatgpt-க்கு போட்டியாகக் களமிறங்கும் சீன செயற்கை நுண்ணறிவு பாட் சேவை..!

  அமேசான் சில நாட்களுக்கு முன்பு தனது ஊழியர்கள் Chatgpt யை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு Chatgpt எந்த அளவுக்கு துல்லியமான தகவல்களை கொடுக்கிறது என்றால். அமேசான் ஊழியர்கள், இதைப் பயன்படுத்தி நேர்காணலில் எவ்வாறு பதில் அளிப்பது, பயிற்சிக்கான ஆவணங்கள் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு பதில்களை பெற்று இருக்கிறார்கள். இவை அனைத்துமே மிக துல்லியமாக, கச்சிதமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்து இருந்தனர். மேலும், உலக அளவில் கூகுள் தேடலில் chatgpt தான் மிக அதிக அளவுக்கு தேடப்பட்டு இருக்கிறது என்பதை பற்றிய தகவலும் வெளியாக இருக்கிறது. இதில் சீனா தான் டிமாண்டில் முதல் இடத்தில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES