கடந்தாண்டின் இறுதியில் இருந்தே தொழில்நுட்ப உலகில் மிகப்பெரும் பேசும் பொருளாக மாறி உள்ள விஷயம் தான் செயற்கை நுண்ணறிவு. குறிப்பாக சாட் ஜிபிடி என்ற புதிய செயற்கை நுண்ணறிவின் மூலம் தொழில்நுட்ப உலகில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்பட துவங்கியுள்ளன. மேலும் மிக பெரும் டெக் நிறுவனங்களும் தங்களுக்கு என தனியாக செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் வேலையில் இறங்கியுள்ளன.
அந்த வகையில் சமீபத்திய I/O 2023 மாநாட்டில் கூகுள் நிறுவனம் தன்னுடைய செயற்கை நுண்ணறிவான பார்ட் பற்றிய புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் வரை கூகுளின் பார்ட் செயற்கை நுண்ணறிவானது யூஎஸ் மற்றும் யுகே ஆகிய பகுதிகளில் மட்டுமே பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டது. மேலும் மக்கள் இதனை பயன்படுத்த வேண்டும் என வெயிட் லிஸ்டில் காத்திருந்து அதன் பின்னரே பயன்படுத்த முடியும் என்ற நிலையில் தான் இருந்து வந்தது.
அதன் பின்னர் அனைவரும் பயன்படுத்தும் படி கூகுள் ஆனது இதனை மாற்றியமைத்தது. தற்போதைய நிலவரப்படி 180 நாடுகளில் கூகுளின் பார்ட் செயற்கை நுண்ணறிவானது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவும் உள்ளடக்கம். அந்த வகையில் சாட் ஜிபிடிக்கு போட்டியாக களமிறங்கியுள்ள கூகுள் பார்ட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்களை பற்றி இப்போது பார்ப்போம்.
கோடிங்கில் முன்னேற்றம் : மேலும் கூகுள் ஆனது பார் அக்கவுண்ட் டெவலப்பர் இன்புட் மூலம் பார்டை அப்டேட் செய்கிறது. இதன் மூலம் பல்வேறு புதிய வசதிகளையும் அளிக்க முடியும். கூகுளின் தகவலின் படி பார்டானது ஏற்கனவே 20 ப்ரோகிராமிங் மொழிகளில் தேர்ச்சி அடைந்துள்ளது. அதில் கூகுள் ஷீட்ஸ், பைத்தான், சி பிளஸ் பிளஸ், ஆகியவையும் உள்ளடக்கம்.
ப்ளக்-இன் சப்போர்ட் : சாட் ஜிபிடி போலவே பார்ட் செயற்கை நுண்ணறிவிலும் நம்மால் ப்ளக் இன்னை பயன்படுத்த முடியும். உதாரணத்திற்கு ஓல்ட் பிரேம், கான் அகாடமி, ஜிப் ரெக்ரூட்டர், ஓபன் டென்னிஸ், கயாக் போன்றவற்றை இணைத்து கொள்ள முடியும். மேலும் கூகுளின் மற்ற செயலிகளான டாக்ஸ், டிரைவ், ஜிமெயில், மேப்ஸ் போன்றவையும் இணைத்து கொள்ள முடியும்.