முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » ஆதார் நம்பர் தெரிந்தால் வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியுமா?

ஆதார் நம்பர் தெரிந்தால் வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியுமா?

ஆதார் எண் மூலம் வங்கி கணக்கை ஹாக் செய்து பணத்தை திருட முடியாமா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

 • 17

  ஆதார் நம்பர் தெரிந்தால் வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியுமா?

  இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) நிர்வகிக்கப்படும் ஆதார் என்பது இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் 12 டிஜிட் தனிப்பட்ட அடையாள எண் ஆகும். உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

  MORE
  GALLERIES

 • 27

  ஆதார் நம்பர் தெரிந்தால் வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியுமா?

  மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட கைரேகைகள், கருவிழி ஸ்கேன் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட மக்கள்தொகை மற்றும் பயோமெட்ரிக் தகவல்களின் அடிப்படையில் ஆதார் கார்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு தொடங்க, அரசாங்கத் திட்டங்கள் மற்றும் மானியங்களுக்கு விண்ணப்பிக்க மற்றும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய உள்ளிட்ட பல விஷயங்களுக்கு ஆதார் எண்ணானது அடையாளமாக மற்றும் முகவரிக்கான சான்றாக இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 37

  ஆதார் நம்பர் தெரிந்தால் வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியுமா?

  உங்கள் ஆதார் நம்பரை தெரிந்த கொண்ட ஒருவரால் உங்களது வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியுமா? UIDAI-ன் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் கொடுத்துள்ள பதிலின்படி, ஆதார் நம்பர் தெரிந்தால் பேங்க் அக்கவுண்ட்டை ஹேக் செய்துவிடுவார்கள் என்பது தவறானது. உதாரணமாக உங்கள் ஏடிஎம் கார்டு நம்பரை மட்டும் தெரிந்து கொள்வதால், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து உங்களது பணத்தை யாரும் பணம் எடுக்க முடியாது. அதே போல் தான் உங்கள் ஆதார் நம்பரை மட்டுமே தெரிந்து கொள்வதன் மூலம், உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை யாரும் ஹேக் செய்து பணத்தை எடுக்க முடியாது என UIDAI குறிப்பிட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 47

  ஆதார் நம்பர் தெரிந்தால் வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியுமா?

  வங்கிகள் வழங்கும் PIN அல்லது OTP-ஐ நீங்கள் மோசடி நபர்களுக்கு தெரியப்படுத்தாத வரை உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணம் பாதுகாப்பாகவே இருக்கும். ஆதார் காரணமாக ஒரு நிதி இழப்பு கூட ஏற்படவில்லை என்பதால், ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் நிம்மதியாக இருக்கலாம் என UIDAI கூறியுள்ளது. ஆதார் எண்ணை மட்டும் தனியாக வங்கி அல்லது பிற சேவைகளுக்கு பயன்படுத்த முடியாது. ஒரு சில மக்களுக்கு UIDAI பயோமெட்ரிக்ஸ், பேங்க் அக்கவுண்ட், PAN போன்ற தரவுகளை கொண்டு தங்களது செயல்பாடுகளை கண்காணிக்கிறது என்ற சந்தேகம் இருக்கிறது இதற்கான பதில் இல்லை என்பதே.

  MORE
  GALLERIES

 • 57

  ஆதார் நம்பர் தெரிந்தால் வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியுமா?

  ஆதாரை நீங்கள் பதிவு செய்யும் போது அல்லது புதுப்பிக்கும் போது நீங்கள் வழங்கும் மிகக் குறைந்த தகவல்கள் மட்டுமே UIDAI டேட்டாபேஸில் உள்ளன. இதில் உங்கள் பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி, பத்து விரல் ரேகைகள், இரண்டு Iris scans, ஃபேஷியல் ஃபோட்டோகிராஃப், மொபைல் எண் (ஆப்ஷ்னல்) மற்றும் இ-மெயில் ஐடி (ஆப்ஷ்னல்) உள்ளிட்டவை அடங்கும்.

  MORE
  GALLERIES

 • 67

  ஆதார் நம்பர் தெரிந்தால் வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியுமா?

  பேங்க் அக்கவுண்ட்ஸ், ஸ்டாக்ஸ், பரஸ்பர நிதிகள், நிதி மற்றும் சொத்து விவரங்கள், சுகாதாரப் பதிவுகள், குடும்பம், சாதி, மதம், கல்வி போன்றவற்றைப் பற்றிய உங்கள் தனிப்பட்ட தகவல் UIDAIயிடம் இல்லை. ஆதார் என்பது ஒரு identifier தானே தவிர profiling tool இல்லை. ஆதார் சட்டம் 2016-ன் பிரிவு 32(3) குறிப்பாக UIDAI அங்கீகாரத்தின் நோக்கத்தைப் பற்றிய எந்தத் தகவலையும் தானாகவோ அல்லது எந்த நிறுவனம் மூலமாகவோ கட்டுப்படுத்துவது, சேகரிப்பது அல்லது பராமரிப்பதை தடை செய்கிறது.

  MORE
  GALLERIES

 • 77

  ஆதார் நம்பர் தெரிந்தால் வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியுமா?

  மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால் உத்தியோகபூர்வ ஆன்லைன் போர்டல் தவிர, UIDAI பல அங்கீகரிக்கப்பட்ட Enrollment ஏஜென்சிகள் மூலம் செயல்படுகிறது. எனினும் சேகரிக்கப்பட்ட தகவல்களின் துல்லியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய, UIDAI அமைத்த கடும் நெறிமுறைகள் மற்றும் தரநிலைகளை இந்த ஏஜென்சிகள் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES