ஸ்மார்ட்போன் சந்தையில் ஏராளமான மாடல்கள் இருந்தாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே அதிகம் விற்க கூடியதாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம் அந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும், அவற்றின் திறனும் தான். அதே போன்று அந்த ஸ்மார்ட்போன் நமது பட்ஜெட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்போம்.
இப்படி எல்லா விதங்களில் சிறப்பு வாய்ந்த சில மொபைல்கள் உள்ளன. அந்த வகையில் ரூ. 20,000 முதல் ரூ.30,000 வரை உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்களை பற்றிய பட்டியலை இந்த பதிவில் பார்ப்போம்.
ஒப்போ F21 ப்ரோ:
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் ஒப்போ F21 ப்ரோ ஸ்மார்ட்போன் வருகிறது. இதன் விலை ரூ.22,999-ஆக உள்ளது. சன்செட் ஆரஞ்சு நிறத்தில் உள்ள இந்த கவர்ச்சிகரமான ஃபோன் சிறப்பான வடிவமைப்பைப் பெறுகிறது. இதில் AI டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. அத்துடன் மைக்ரோலென்ஸுடன் கூடிய 64MP + 2MP + 2MP வசதி உடன் சோனி IMX709 சென்சார் கொண்ட 32MP முன் கேமரா வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. ஒப்போ F21 ப்ரோ ஆனது 6.43 இன்ச் FHD+ AMOLED பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே வசதியுடன், 33W SUPERVOOC சார்ஜிங் தரத்துடன் வருகிறது. மேலும் இது 4500 mAh பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் 6nm ப்ராசஸரில் இயங்குகிறது.
சியோமி 11i ஹைப்பர்சார்ஜ்:
இதன் பெயரை போலவே, சியோமி 11i ஹைப்பர்சார்ஜ் ஸ்மார்ட்போன் 120W கொண்ட வேகமான சார்ஜிங் வசதியுடன் வருகிறது. இதை பயன்படுத்தி மிக வேகமாக சார்ஜ் செய்ய முடியும். இது 120Hz ரெபிரஷ் ரேட்டுடன் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 920 டைமென்சிட்டி வசதியுடன் இயங்குகிறது. இந்த சியோமி 11i ஹைப்பர்சார்ஜ் ஸ்மார்ட்போன் கேமராவானது, 108MP டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த போனின் விலை என்பது 6ஜிபி/128ஜிபி வேரியன்ட்டானது ரூ.26,999 ஆகவும், மற்றும் 8ஜிபி/128ஜிபி வேரியன்ட் ரூ. 28,999 ஆகவும் உள்ளது.
ரியல்மி 9 ப்ரோ பிளஸ்:
மீடியாடெக் டைமென்சிட்டி 920-இல் இயங்கும், இந்த ரியல்மீ 9 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனானது 6.4 இன்ச் 90Hz AMOLED டிஸ்ப்ளே வசதியுடன் வருகிறது. இதில் 60W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், 4500mAh பேட்டரியும் தரப்பட்டுள்ளது. மேலும் இதில் மூன்று பின்புற கேமராவும்( 50MP + 8MP + 2MP) 16MP முன்புற கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ 24,999 ஆகவும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. ரூ.26,999 ஆகவும், மேலும் 8ஜிபி/256ஜிபி மாடலின் விலை ரூ. 28,999 ஆகவும் உள்ளது.
சாம்சங் கேலக்சி எம்53:
சிறந்த வடிவமைப்பு மற்றும் குவாட் கேமரா அமைப்புடன், சாம்சங் கேலக்சி எம்53 சந்தையில் விற்கபடுகிறது. இந்த போன் 120Hz ரெபிரஷ் ரேட்டுடன், 6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவைப் பெறுகிறது. மேலும் இது மீடியாடெக்-இன் டைமென்சிட்டி 900 சிப்செட்டில் இயங்குகிறது. இதில் 5000mAh பெரிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட மாடலின் விலை ரூ. 26,499 ஆகவும் மற்றும் 8 ஜிபி ரேம்- 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ. 28,499 ஆகவும் உள்ளது.
iQOO நியோ 6:
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட iQOO நியோ 6 ஸ்மார்ட்போனில் சிறந்த கேமரா செயல்திறன் வசதியுடன், கேமிங் வசதியும் தரப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்டில் இயங்குகிறது மற்றும் 120Hz ரெபிரஷ் ரேட்டுடன், 6.62-இன்ச் பிளாட் E4 AMOLED டிஸ்ப்ளே வசதியையும் பெற்றுள்ளது. இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன், 4700mAh பேட்டரியை கொண்டுள்ளது. GW1P சென்சார் கொண்ட 64MP OIS பிரைமரி கேமரா, 8MP வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமராவும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ 29,999 ஆக உள்ளது.