முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » ரூ.15000க்குள் கிடைக்கும் சூப்பரான ஸ்மார்ட் ஃபோன்கள் வேண்டுமா? இதோ லிஸ்ட்!

ரூ.15000க்குள் கிடைக்கும் சூப்பரான ஸ்மார்ட் ஃபோன்கள் வேண்டுமா? இதோ லிஸ்ட்!

நியாயமான விலையில், தரமான ஃபோன் வாங்க வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருக்கும். உதாரணத்திற்கு இன்றைய சூழலில் ரூ.15 ஆயிரத்திற்குள் நல்லதொரு ஸ்மார்ட்ஃபோன் வாங்க வேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பாக இருக்கலாம்.

  • 16

    ரூ.15000க்குள் கிடைக்கும் சூப்பரான ஸ்மார்ட் ஃபோன்கள் வேண்டுமா? இதோ லிஸ்ட்!

    இன்று பெரும்பாலான மக்கள் கையில் ஸ்மார்ட் ஃபோன்கள் உள்ளன என்றாலும், வாங்கி நீண்ட நாளுக்கு பிறகு அதன் செயல்திறன் மற்றும் பேட்டரிதிறன் போன்றவை குறையும் மற்றும் ஃபோனில் ஏகப்பட்ட சிராய்ப்புகள் ஏற்படும் நிலையில் புதிய ஃபோன் வாங்குவதற்கு திட்டமிடுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 26

    ரூ.15000க்குள் கிடைக்கும் சூப்பரான ஸ்மார்ட் ஃபோன்கள் வேண்டுமா? இதோ லிஸ்ட்!

    அது மட்டுமல்லாமல் லேட்டஸ்ட் சாஃப்ட்வேர் அப்டேட் மற்றும் இன்னும் புதிய வசதிகளை பெற வேண்டும் என்றாலும் புதிய ஃபோன் கட்டாயமாகிவிடுகிறது. அதே சமயம், நியாயமான விலையில், தரமான ஃபோன் வாங்க வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருக்கும். உதாரணத்திற்கு இன்றைய சூழலில் ரூ.15 ஆயிரத்திற்குள் நல்லதொரு ஸ்மார்ட்ஃபோன் வாங்க வேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பாக இருக்கலாம். இந்த விலைக்குள் சிறப்பான ஃபோன் எது, அதன் வசதிகள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 36

    ரூ.15000க்குள் கிடைக்கும் சூப்பரான ஸ்மார்ட் ஃபோன்கள் வேண்டுமா? இதோ லிஸ்ட்!

    Poco M4 Pro 5G : நியாயமான விலையில் 5ஜி ஃபோன் வாங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும்பட்சத்தில் போகோ எம்4 ப்ரோ 5ஜி நல்லதொரு தேர்வாக அமையும். இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்.ஓ.சி. ப்ராசஸர் உள்ளது. ஒவ்வொரு நாளும் எந்தவித தடங்கலும் இன்றி சுமூகமான செயல்திறனை உங்களுக்கு வழங்கும். இது 5000 எம்ஏஹெச் பேட்டரி திறனும், 50 எம்பி டிரிபிள் கேமரா வசதியும் கொண்டதாகும். 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜருடன் வருகிறது. இதன் விலை ரூ.14,999 என்ற அளவில் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    ரூ.15000க்குள் கிடைக்கும் சூப்பரான ஸ்மார்ட் ஃபோன்கள் வேண்டுமா? இதோ லிஸ்ட்!

    Moto G13 : இதில் வெவ்வேறு வேரியன்ட்டுகள் விற்பனைக்கு வருகின்றன. முதன்மையான வசதிகள் கொண்ட ஃபோன் ரூ.15 ஆயிரத்திற்கு கிடைக்கும் என்றால், கொஞ்சம் வசதிகளை குறைத்துக் கொள்ளும்பட்சத்தில் ரூ.10 ஆயிரத்திற்கே உங்களுக்கு கிடைக்கும். ஆனால், இது 4ஜி வசதி கொண்ட ஃபோன் ஆகும். ஹீலியோ ஜி85 ப்ராசஸர் கொண்ட இந்த ஃபோனில் ஃபோட்டோக்கள் சிறப்பான தரத்தில் அமைகின்றன. இதிலும் 50 எம்பி டிரிபிள் கேமரா மற்றும் 5,000 எம்ஏஹெச் பேட்டரி திறன் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 56

    ரூ.15000க்குள் கிடைக்கும் சூப்பரான ஸ்மார்ட் ஃபோன்கள் வேண்டுமா? இதோ லிஸ்ட்!

    Samsung Galaxy M13 5G : மார்க்கெட்டில் எத்தனையோ நிறுவனத் தயாரிப்புகள் வந்துவிட்டாலும் சாம்சங் மட்டுமே வேண்டும் என்ற தீரா காதல் கொண்ட நபர்களுக்கு இது நல்ல தேர்வாக அமையும். 11 வகையான 5ஜி அலைவரிசைகள் இதில் வேலை செய்யும். இதிலும் 5,000 எம்ஏஹெச் பேட்டரி திறன் உண்டு. 50 எம்பி டிரிபிள் கேமரா வசதியுடன் வருகிறது. நீங்கள் தேர்வு செய்யும் வேரியண்ட் பொருத்து ரூ.13,800 என்ற விலையில் இருந்தே இது கிடைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 66

    ரூ.15000க்குள் கிடைக்கும் சூப்பரான ஸ்மார்ட் ஃபோன்கள் வேண்டுமா? இதோ லிஸ்ட்!

    iQOO Z6 Lite 5G : மிக சிறப்பான பட்ஜெட் ஃபோன் பிரிவில் நீண்ட காலமாகவே இந்த ஃபோன் இடம்பிடித்து வருகிறது. ஸ்நாப்டிராகன் 4 ஜெனரேஷன் 1 எஸ்.ஓ.சி. ப்ராசஸர் கொண்டதாகும். இதிலும் மற்ற ஃபோன்களை போலவே 50 எம்பி டூயல் கேமரா மற்றும் 5,000 எம்ஏஹெச் பேட்டரி திறன் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. ரூ.15 ஆயிரத்திற்கு உட்பட்ட விலையில் அட்டகாசமான வசதிகள் மற்றும் தரமான அனுபவத்தை தரக் கூடிய ஃபோனாக இது உள்ளது.

    MORE
    GALLERIES