ஒலி வெளியீட்டின் தரம் மற்றும் சீரான விலை ஆகியவற்றின் அடிப்படையில் ஸ்பீக்கர் டெக்னலாஜி விரைவான முன்னேற்றத்தை பெற்று இருக்கிறது. பொதுவாக போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் பயணத்தின் போது அல்லது வீட்டிலிருக்கும் போதும் மக்களுக்கு மிகவும் பயன்பட கூடிய ஒரு டிவைஸாக இருக்கிறது. போர்ட்டபிள் ஸ்பீக்கர்களை ப்ளூடூத், என்எப்சி அல்லது aux கேபிள்கள் வழியாக வயர்லெஸ் முறையில் கனெக்ட் செய்வதன் மூலம் நல்ல தரமான ஆடியோவை பெற முடிகிறது. பேட்டரி மூலம் இயங்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ள போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் குறைந்தபட்சம் 3 மணி நேரம் முதல் அதிகபட்சம் ஒருநாள் வரையில் சார்ஜ் நீடிக்கும் வகையில் சந்தைகளில் கிடைகின்றன.
தற்போது மார்க்கெட்டில் விற்கப்டும் பெரும் எண்ணிக்கையிலான போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் அல்லது ப்ளூடூத்-எனேபிள்டு ஸ்பீக்கர்கள் உங்கள் bag-கிற்குள் எளிதில் ஃபிட்டாகும் வகையில் கிடைக்கின்றன. ஒரு புதிய நிகழ்ச்சி/திரைப்படத்தை டேப்லெட், போன் அல்லது லேப்டாப்பில் சிறந்த ஒலி அனுபவத்துடன் பார்க்க விரும்பினால், அதற்கு போர்ட்டபிள் ஸ்பீக்கர்களை பயன்படுத்துவது மிகவும் சிறந்த அனுபவத்தை அளிக்கும். மேலும் சில ஸ்பீக்கர்களில் உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோனுடன் கால் அட்டென்ட் செய்யும் வசதிகளும் கொடுக்கப்படுகின்றன. இந்தியாவில் ரூ.5,000 கீழ் விற்கப்பட்டு வரும் சிறந்த போர்ட்டபிள் ஸ்பீக்கர் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
Ultimate Ears Wonderboom என்பதே சுருக்கமாக UE Wonderboom என்று குறிப்பிடப்படுகிறது. இந்த ஸ்பீக்கர் ஒரு வட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இதை ஒரு கொக்கியில் மாட்டும் வகையில் அல்லது எளிதாக எடுத்துச் செல்ல ஒரு பட்டை (strap ) இந்த ஸ்பீக்கருடன் பொருத்தப்பட்டுள்ளது. யுஇ வொண்டர்பூம் ஸ்பீக்கர் 20,000KHz ஃப்ரீக்குவன்ஸி ரேஞ்சை வழங்குகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தல் சுமார் 10 மணி நேரம் பேட்டரி பேக்அப்பை இது தருகிறது. அவுட்டோர் சூழல்களுக்கு மிகவும் பொருத்தமான வகையில் முற்றிலும் வாட்டர் ப்ரூஃப்-வுடன் வரும் இந்த டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம் கொண்ட டிவைஸில் மைக்ரோஃபோன் கொடுக்கப்படவில்லை. இதன் தோராய விலை ரூ.3,995.
இந்த ஸ்பீக்கரின் தோராய விலை ரூ.3,199. Zebronics-ஸின் இந்த Zeb-Music Bomb ஸ்பீக்கர் பார்ப்பதற்கு UE Wonderboom ஸ்பீக்கரை போலவே இருக்கிறது. இது IPX5 வாட்டர் ப்ரூஃப் ரேட்டிங்கை கொண்டுள்ளது. 2 கலர்களில் விற்கப்படும் இது ப்ளூடூத், USB, AUX போன்ற பல கனெக்டிவிட்டி விருப்பங்களை கொண்டுள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தல் 10 மணி நேரம் பயன்படுத்த முடியும். மேலும் இதில் கால் ஃபங்க்ஷன் பட்டன் இருக்கிறது.
சோனி நிறுவனத்தினுடைய இந்த ஸ்பீக்கரின் தோராய விலை சுமார் ரூ.3,990 ஆகும். இந்த ஸ்பீக்கரின் முக்கிய அம்சங்களில் ஒன்று தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP67 ரேட்டிங் ஆகும், எனவே இந்த ஸ்பீக்கரை இன்டோரில் மட்டுமின்றி அவுட்டோரிலும் தயக்கமின்றி பயன்படுத்தலாம். தவிர இது 20,000 ஹெர்ட்ஸ் வரை ஃப்ரீக்குவன்ஸி ரெஸ்பான்ஸ் ரேஞ்சையும், ஒரு முழு சார்ஜுக்கு 16 மணிநேர பேட்டரி பேக்அப்பையும் வழங்குகிறது. மேலும் கால்ஸ்களை எடுக்க இன்பில்ட் மைக்ரோஃபோன் உள்ளது.
இந்த ஸ்பீக்கரின் தோராய விலை ரூ.4,729. சற்று கரடுமுரடான லுக்கில் காணப்படும் இந்த ஸ்பீக்கர், 16W ஆடியோ அவுட்புட்டை தருகிறது. ஷாக் ரெசிஸ்டென்ட் கொண்டுள்ள இது ஒருமுறை சார்ஜ் செய்தல் சுமார் 15 மணிநேரம் வரை இயங்க கூடியது. சோனி ஸ்பீக்கர்களைப் போலவே, இதுவும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP67 ரேட்டிங்கை கொண்டது.
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது போட் ஸ்டோன் 1400 ஸ்பீக்கர் ஆகும். ரூ.5,000 பட்ஜெட்டில் வாங்க கூடிய சிறந்த அவுட்புட்டை கொண்ட ஸ்பீக்கராக இது உள்ளது. ஏனெனில் இது 30W சவுண்ட் அவுட்புட்டை தருகிறது. இதன் விலை தோராயமாக ரூ. 4,999. ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 மணிநேரம் வரை பிளே ஆகும் இந்த ஸ்பீக்கரை எங்கு சென்றாலும் எளிதாக கொண்டு செல்ல ஒரு ஸ்ட்ராப் இதனுடன் பிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது IPX5 வாட்டர் ப்ரூஃப் ரேட்டிங்கை பெற்றுள்ளது.