மே 8-ல் அன்னையர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், உங்கள் அம்மாவிற்கு என்ன கிஃப்ட் கொடுக்கலாம் என்று நீங்கள் இன்னும் முடிவு செய்யவில்லையா ? ரூ.10,000 பட்ஜெட்டிற்குள் இருக்கும் சில நவீன தயாரிப்புகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம். இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி உங்கள் தாய்க்கு பரிசளிப்பது அவருக்கு மறக்க முடியாத அன்னையர் தினமாக அமையும்.
ஸ்மார்ட் ஃபோன்கள்: இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்ஃபோன் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உங்கள் அம்மா நீண்ட காலமாக பழைய மொபைலை பயன்படுத்தி வருகிறார் என்றால் இந்த அன்னையர் தினத்தில் அவருக்கு புதிய ஸ்மார்ட் ஃபோன் ஒன்றை வாங்கி கிஃப்ட் கொடுக்கலாம். உங்கள் பட்ஜெட் சுமார் ரூ.10,000 என்றால், நீங்கள் Realme Narzo 30A மொபைலை வாங்கலாம். உங்களால் ரூ.13,000 வரை செலவழிக்க முடிந்தால், Redmi Note 10S மொபைலை உங்கள் தாய்க்கு வாங்கி கொடுக்கலாம். இது 5G ஸ்மார்ட் ஃபோன் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.
வயர்லெஸ் இயர்ஃபோன்ஸ்: உங்கள் அம்மா வயர்டு இயர்ஃபோன் வைத்து பயன்படுத்தி வருகிறார் என்றால் அவருக்கு வயர்லெஸ் இயர்ஃபோன் வாங்கி கொடுப்பதற்கு சிறந்த நேரம் இது. ஏனென்றால் இன்றைய நாளில் வயர்டு இயர்ஃபோன் பழைய ட்ரெண்டாகி விட்டது. வயர்லெஸ் இயர்பட்ஸ் மிகவும் சிறந்தது மற்றும் தொல்லை இல்லாதது. வேலை செய்யும் போது கால்ஸ் வந்தால் கூட எளிதாக உங்கள் அம்மா கால்ஸை அட்டென்ட் செய்ய முடியும் அல்லது பாடல்களைக் கேட்க முடியும். உங்கள் தாய்க்கு சிறந்த வயர்லெஸ் இயர்ஃபோன் அனுபவத்தை கொடுக்க Soundcore Air 2 Pro-வை வாங்கலாம். இது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனை (ANC) சப்போர்ட் செய்கிறது. Flipkart-ல் இதன் விலை ரூ.7,999. உங்கள் பட்ஜெட் ரூ. 2,000 தான் என்றால், நீங்கள் OnePlus Bullets Wireless Z2-ஐ வாங்கலாம்.
ஸ்மார்ட் லேம்ப்: இரவு தூங்க செல்வதற்கு முன் ஓய்வு நேரத்தில் உங்கள் அம்மா புத்தகம் படிக்க விரும்புபவர் என்றால், அவருக்காக நீங்கள் ஒரு ஸ்மார்ட் லேம்ப் வாங்கி பரிசளிக்கலாம். Xiaomi-ன் Mi Smart Bedside Lamp 2 அமேசானில் ரூ.2,799 என்ற விலையில் கிடைக்கிறது. Xiaomi அதன் ஸ்மார்ட் லேம்ப் 11 ஆண்டுகள் நீண்ட ஆயுளை வழங்கும் என்றும், விளக்கின் நிறம் மற்றும் பிரகாசத்தை கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும் என்று கூறுகிறது. இதில் டச் பேனல் உள்ளது, எனவே ஒருவரால் வால்யூமையும் கட்டுப்படுத்த முடியும். இது அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது.Mi Home app-ஐ பயன்படுத்தி Mi Smart Bedside Lamp 2-ஐ கன்ட்ரோல் செய்யலாம்.
ஸ்மார்ட் ஸ்பீக்கர்: உங்கள் அம்மா பாடல்களை விரும்பி கேட்பவர் என்றால் அவருக்கு நீங்கள் ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஒன்றை வாங்கி கொடுப்பது சிறந்த தேர்வாக இருக்கும். Amazon-ன் Echo Show 5 வாங்கினீர்கள் என்றால் உங்கள் அம்மா பாடல்களை கேட்பதோடு, வீடியோக்கள் அல்லது டிவி நிகழ்ச்சிகளை இந்த ஸ்பீக்கரில் பார்க்க முடியும். இதன் விலை ரூ.4,499, மேலும் இது 5.5 இன்ச் திரையைக் கொண்டுள்ளது. நீங்கள் ஒரு பெரிய திரையை விரும்பினால், நீங்கள் Amazon Echo Show 8-ஐ வாங்கலாம். இதன் விலை ரூ.9,999 ஆகும். இந்த டிவைஸ்கள் உங்கள் வீட்டை தொலைவிலிருந்து கண்காணிக்கப் பயன்படும் கேமராவையும் வழங்குகின்றன. வீடியோ கால் செய்வதற்கும் இந்த கேமராவைப் பயன்படுத்தலாம்.
ஸ்மார்ட் வாட்ச்: இது எதுவுமே வேண்டாம் என்றால் உங்கள் தாய்க்காக நீங்கள் ஒரு ஸ்மார்ட் வாட்ச் அல்லது ஃபிட்னஸ் பேண்ட் ஒன்றை வாங்கலாம். Mi band 6, Amazfit Bip U Pro, Amazfit Bip S Lite மற்றும் Realme Watch 2 Pro போன்ற பல சிறந்த தயாரிப்புகள் கிடைகின்றன. இவை தினசரி ஸ்டெப்ஸ், ஸ்லீப்பிங் பேட்டர்ன்ஸ், ஹார்ட் ரேட் மற்றும் SpO2 ஆகியவற்றை கண்காணிக்க உதவும்.