கோவிட்-19 தொற்று தீவிரமாக இருந்த போது பெரிய ஸ்க்ரீன்களை கொண்ட டிவைஸ்களுக்கான தேவை அதிகரித்தது. இதனை தொடர்ந்து டேப்லெட் (tablet) மார்க்கெட் கடந்த ஆண்டு மீண்டும் எழுச்சி பெற்றது. தேவைகளை தொடர்ந்து Realme, Motorola, Nokia போன்ற நிறுவனங்கள் பட்ஜெட் மற்றும் மிட்-ரேஞ்ச் ஆண்ட்ராய்டு டேப்லெட்ஸ்களை அறிமுகப்படுத்தின.
ஆப்பிள் ஐபேட் ப்ரோ எம்1 (Apple iPad Pro M1):
இந்த டாப்-எண்ட் iPad Pro சந்தேகத்திற்கு இடமின்றி சிறந்த iPad அனுபவத்தை வழங்குகிறது. உங்களுக்கு தேவைப்படும் ஸ்க்ரீன் சைஸ் விருப்பங்களைப் பொறுத்து 11-இன்ச் அல்லது 12.9-இன்ச் வெறியன்ட்ஸ்களில் ஒன்றை தேர்வு செய்யலாம். 12.9 இன்ச் மாடலில் லிக்விட் ரெடினா எக்ஸ்டிஆர் மினி LED டிஸ்ப்ளே உள்ளது, அதே நேரம் 11 இன்ச் ஐபாட் ப்ரோ லிக்விட் ரெடினா டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 2 மாடல்களுமே ProMotion 120Hz ரெஃப்ரஷ் ரேட் டெக், ட்ரூ டோன் மற்றும் P3 கலர் வரம்பை சப்போர்ட் செய்கின்றன. 12.9-இன்ச் iPad 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 11-இன்ச் மாடல் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இரண்டுமே புதிய M1 சிப், 16GB வரை ரேம் மற்றும் பின்புறத்தில் டூயல் கேமரா செட்டப்புடன் வருகின்றன. iPad Pro M1 சீரிஸ் 4-ஸ்பீக்கர் ஆடியோ செட்டப் மற்றும் அழைப்புகள், வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆடியோ ரெக்கார்டிங்கிற்கான 5 ஸ்டுடியோ-குவாலிட்டி மைக்ரோஃபோன்களையும் கொண்டுள்ளது. இந்தியாவில் iPad Pro M1 11 இன்ச் விலை பேஸ் மாடலின் விலை ரூ.71,900-ல் தொடங்குகிறது. அதே சமயம் 12.9 இன்ச் மாடல் விலை ரூ.99,900-ல் தொடங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா (Samsung Galaxy Tab S8 Ultra):
Galaxy Tab S8 Ultra-வின் 14.6-இன்ச் AMOLED டிஸ்ப்ளே ஆண்ட்ராய்டு டேப்லெட்டில் சிறந்த ஒரு ஸ்கிரீனை வழங்குகிறது. Tab S8 Ultra S Pen-ஐ சப்போர்ட் செய்கிறது. Snapdragon 8 Gen 1 SoC மற்றும் 11,200 mAh பேட்டரி இந்த டிவைஸில் உள்ளது. இந்த சாம்சங் டேப்லெட் பின்புறத்தில் டூயல் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. Tab S8 Ultra ஆனது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது ஆனால் பெட்டியில் சார்ஜர் இல்லை. Galaxy Tab S8 Ultra-வின் ஆரம்ப விலை ரூ.1,08,900. இந்த டிவைஸின் ஸ்கிரீன்/ஃபார்ம் ஃபேக்டர் உங்களுக்கு மிகவும் பெரிதாக தோன்றினால், Tab S8 மற்றும் Tab S8 Plus வடிவத்தில் சிறிய வெர்ஷன்கள் உள்ளன. இவை 11 இன்ச் மற்றும் 12.4 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளன.
சியோமி பேட் 5 (Xiaomi Pad 5):
இந்த டிவைஸ் Mi Pad 5 என தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் கிடைக்கிறது. பேஸ் 6GB ரேம் ஆப்ஷன் ஆண்ட்ராய்டு டேப்லெட்டின் விலை ரூ.26,999 ஆகும். இந்த விலையில் யூஸர்கள் WQHD+ ரெசல்யூஷனுடன் 10.95-இன்ச் IPS LCD, 120Hz ரெஃப்ர்ஷ் ரேட் சப்போர்ட் மற்றும் 500 nits பீக் பிரைன்ட்ஸை பெறுகிறார்கள். இந்த ஆண்ட்ராய்டு டேப்லெட்டில் Snapdragon 860 SoC, 8720 mAh பேட்டரி உள்ளது மற்றும் பின்புறத்தில் 13MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டிவைஸ் Dolby Atmos சப்போர்ட்டுடன் குவாட்-ஸ்பீக்கர் செட்டப்பை கொண்டுள்ளது. தவிர இந்த டேப்லெட் Xiaomi பென் மற்றும் ஸ்மார்ட் கீபோர்டையும் சப்போர்ட் செய்யும். ஆனால் இவற்றை தனியாக வாங்க வேண்டும்.
ஐபேட் ஏர் எம்1 (iPad Air M1):
இந்த டிவைஸின் ஆரம்ப விலை ரூ.54,900 மற்றும் 10.9 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த iPad Air டூயல் ஸ்பீக்கர் செட்டப்பை கொண்டுள்ளது. Air M1 டிவைஸானது USB Type-C போர்ட், 12MP ரியர் கேமரா மற்றும் ஆப்பிள் பென்சிலுக்கான சப்போர்ட்டுடன் வருகிறது. மலிவான பட்ஜெட்டில் iPadOS அனுபவத்தைப் பெற விரும்புவோர் பேஸ் iPad 9th-generation-ஐ பரிசீலிக்கலாம். இதன் விலை ரூ. 30,900 மற்றும் A13 பயோனிக் சிப்புடன் வருகிறது.
ரியல்மி பேட் (Realme Pad):
ரியல்மி நிறுவனம் தனது முதல் டேப்லெட்டான Realme Pad-ஐ இந்தியாவில் 10.4 இன்ச் IPS LCD-யுடன் அறிமுகப்படுத்தியது. இதில் MediaTek Helio G80 SoC ப்ராசஸர் உள்ளது. இதில் 7100 mAh பேட்டரி மற்றும் USB Type-C, 8MP ரியர் கேமரா மற்றும் 8MP ஃப்ரன்ட் கேமரா கொண்டுள்ளது. ரியல்மி பேட் அதிகபட்சம் 4GB ரேம் வரை வருகிறது. வைஃபை கனெக்டிவிட்டியுடன் கூடிய அடிப்படை 3GBரேம் விலை ரூ.13,999. ரியல்மி பேட் மினியும் உள்ளது, இதன் ஆரம்ப விலை ரூ.10,999.