இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் நெட்வொர்க்காக ஜியோ மற்றும் ஏர்டெல் தொலைதொடர்பு நிறுவனங்கள் உள்ளன. ஏர்டெல் பயனர்களுக்கு பல சலுகைகளை அதன் நிறுவனம் கொடுக்கிறது. பலர் ஒரு வருடத்திற்கான முழு ரீச்சார்ஜை பயன்படுத்தி, ஒரு வருடத்திற்கு எந்த இடையூறுகளும் இல்லாமல் இண்டர்நெட் மற்றும் போன் பேசுவதற்கு பயன்படுத்தி கொள்கிறார்கள்.
1. ரூ. 3359 திட்டம் :
இந்த திட்டத்தில் பயனர்கள் ஒரு வருடத்திற்கு இந்தியாவிற்குள் அளவில்லாமல் பேசிக்கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்தில் ஒரு நாளுக்கு 2.5 ஜி.பி டேட்டா பயன்படுத்தவும், 100 எஸ்.எம்.எஸ் அனுப்பும் வகையிலும் அமைந்துள்ளது.
இது தவிர குறிப்பிட்ட இடங்களில் நீங்கள் 5ஜி நெட்வர்க்கை பயன்படுத்தலாம். கூடுதலாக டிஸ்னி ஹாட்ஸ்டாரை 1 வருடமும், இலவச காலர் டியூனும், வின்க் மியூசிக் ஆப்பை இலவசமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பாஸ்ட்டேக் பயன்படுத்தும் போது ரூ. 100 கேஷ்பேக்காகவும், அப்போலோ 24/7-யை 3 மாதம் இலவசமாகவும் பயன்படுத்தலாம்.
2. ரூ. 2,999 திட்டம் :
இந்த திட்டத்தில் பயனர்கள் ஒரு வருடத்திற்கு இந்தியாவிற்குள் அளவில்லாமல் பேசிக்கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்தில் ஒரு நாளுக்கு 2 ஜி.பி டேட்டா பயன்படுத்தவும், 100 எஸ்.எம்.எஸ் அனுப்பும் வகையிலும் அமைந்துள்ளது.
இது தவிர குறிப்பிட்ட இடங்களில் நீங்கள் 5ஜி நெட்வர்க்கை பயன்படுத்தலாம். கூடுதலாக இலவச காலர் டியூனும், வின்க் மியூசிக் ஆப்பை இலவசமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பாஸ்ட்டேக் பயன்படுத்தும் போது ரூ. 100 கேஷ்பேக்காகவும், அப்போலோ 24/7-யை 3 மாதம் இலவசமாகவும் பயன்படுத்தலாம்.
3. ரூ. 2,997 திட்டம் :
இந்த திட்டத்தில் அமெரிக்கா, சீனா, ரஸ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 127 நாடுகளுக்கு 100 நிமிடங்கள் இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் கால்களும் பேசிக்கொள்ளலாம். மேலும் 2 ஜிபி டேட்டாவும் 20 எஸ்.எம்.எஸும் அனுப்ப முடியும்.
மேலும் ஆப்பிரிக்கா, ஜிம்பாவே, எகிப்து உள்ளிட்ட 65 நாடுகளுக்கு 50 நிமிடங்கள் இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் கால்களும் பேசிக்கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்தில் 1 ஜிபி டேட்டாவும் 10 எஸ்.எம்.எஸும் அனுப்ப முடியும். வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச வேண்டும் என நினைப்பவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
4. ரூ. 1799 திட்டம் :
இந்த திட்டத்தில் பயனர்கள் ஒரு வருடத்திற்கு இந்தியாவிற்குள் அளவில்லாமல் பேசிக்கொள்ளலாம். மேலும் 3600 எஸ்.எம்.எஸ் அனுப்பவும், 24 ஜிபி டேட்டா பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும் இந்த திட்டம் அமைந்துள்ளது.
கூடுதலாக இலவச காலர் டியூனும், வின்க் மியூசிக் ஆப்பையும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பாஸ்ட்டேக் பயன்படுத்தும் போது ரூ. 100 கேஷ்பேக்காகவும், அப்போலோ 24/7-யை 3 மாதம் இலவசமாகவும் பயன்படுத்தலாம்.