ஒரு மொபைல் போன் எந்த அளவிற்கு விலையுயர்ந்ததாக இருக்கிறதோ, அதன் அம்சங்களும் அதற்கேற்ப மெருகேறிக் கொண்டே போகும். சிப்செட், டிஸ்ப்ளே, கேமரா மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையிலேயே மொபைல் போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் இதனை மாற்ற நினைக்கும் ஒரு சில நிறுவனங்களும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் அவர்கள் பட்ஜெட்டிற்குள் அடங்கும் போன்களை விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டனர்.
ரியல்மி சி55 (Realme C55) : 6GB RAM மற்றும் 6GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் தற்போது ஃபிளிப்கார்டில் ரூபாய். 11,999 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த போன் 6.72 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை டூயல் ரேர் கேமரா செட்டப் (64MP + 2MP) மற்றும் 8MP கொண்ட ஃபிரண்ட் கேமரா உள்ளது. மேலும் 5000 mAh பேட்டரி மற்றும் ஹீலியோ G88 சிப்செட்டைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்சி எஃப்13 (Samsung Galaxy F13) : எக்ஸினாஸ் 850 சிப்செட், 4GB RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த மொபைல் ஃபிளிப்கார்டில் ரூபாய் 10,999 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது 6.6 இன்ச் டிஸ்ப்ளே கொண்டது. இந்த போன் 6,000 mAh பேட்டரி மற்றும் டிரிபிள் ரேர் கேமரா செட்டப் (50MP + 5MP + 2MP) மற்றும் 8MP செல்ஃபி கேமராவும் இதில் உள்ளது.
மோட்டோரோலா ஜி32 (Motorola G32) : 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த மொபைல் போனை ரூபாய் 11, 999 கொடுத்து ஃபிளிப்கார்டில் வாங்கிக் கொள்ளலாம். இந்த போன் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, டிரிபிள் ரேர் கேமரா செட்டப் (50MP + 8MP + 2MP) மற்றும் 16MP ஃபிரண்ட் கேமராவுடன் வருகிறது. மேலும் 5000 mAh பேட்டரி மற்றும் குவால்கம் ஸ்நாப்டிராகன் 680 சிப்செட்டைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்சி எம்13 (Samsung Galaxy M13) : 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்சி எம்13 போனை ரூபாய் 11,489 என்ற விலை கொடுத்து ஃபிளிப்கார்டில் வாங்கிக் கொள்ளலாம். டிரிப்பிள் ரேர் கேமரா செட்டப்புடன் வரும் இந்த போனில் 6000 mAh பேட்டரி உள்ளது. மேலும் இது 6.6 இன்ச் டிஸ்ப்ளே அளவில் கிடைக்கிறது.