கேமிங் பிரியர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்த ஏசஸ் ராக் போன் 7 சீரிஸ் இந்தியா மற்றும் மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள வெறித்தனமான கேமர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு மொபைல் தான் ஏசஸ் ராக் போன் சீரிஸ். அந்த வகையில் இந்த ஏசஸ் ராக் போன் 7 சீரிஸுக்காக நீண்ட நாட்களாக கேமர்கள் காத்திருந்தனர்.
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்புடன் ஹை ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன் வசதியையும் இது கொண்டுள்ளது. இதன் காரணமாக தங்கு தடையற்ற மிகவும் ஸ்மூத்தான கேமிங் அனுபவத்தை யூசர்களுக்கு வழங்குகிறது. செயல்திறன் மட்டுமல்லாமல் இதன் பேட்டரியும் தரமானதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ராக் போன் 7 சீரிசில் வெண்ணிலா வேரியன்டும், ராக் போன் அல்டிமேட்டில் வேறு சில வசதிகளுடனும் சேர்த்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏசஸ் ராக் போன் 7 சீரிஸின் விலை : இந்தியாவில் ஏசஸ் ராக் போன் 7 சீரிஸ் ஆனது 74,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது. 12 ஜிபி ராமுடன் 256ஜிபி இன்டர்னல் மெமரியை இது கொண்டுள்ளது. இதில் ஏரோ ஆக்டிவ் கூலர் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. போனுடன் இதை பெற வேண்டும் எனில் மொத்தமாக 99,999 ரூபாய் கட்டணம் செலுத்தி வாடிக்கையாளர்கள் இதை பெற்றுக்கொள்ள முடியும். 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாடிக்கையாளர்கள் இதனை வாங்கிக் கொள்ள முடியும்.
சிறப்பு வசதிகள் : ராக் போன் 7 மற்றும் 7 அல்டிமேட் ஆகிய இரண்டிலுமே 6.78 இன்ச் அளவிலான சூப்பர் அமோலேட் திரை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூசனுடன் 165 ஹெர்ட்ஸ்ரிப்ரெஷ் ரேட் ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பை கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்புடன் 16 ஜிபி ராம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டுள்ளது.முன் வெளிவந்த ராக் போன்களை போலவே இந்த இரண்டு மாடல்களும் ஏர் ட்ரிகர் சிஸ்டமும், இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் அளிக்கப்பட்டுள்ளன.
ராக் போன் 7 மற்றும் 7 அல்டிமேட் வேரியண்டுகளுக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடே இல்லுமினேடட் ராக் லோகோ மற்றும் ராக் பிமொலேட் டிஸ்ப்ளே தான். ராக் போன் 7 சீரிஸ் ஆனது ஆண்ட்ராய்டு 13- ஐ அடிப்படையாகக் கொண்ட ராக் யூ ஐயின் மேல் இயங்குகிறது. இரண்டு ஓஎஸ் அப்டேட்டுகளுடன் நான்கு வருடத்திற்கான செக்யூரிட்டி அப்டேட்டும் அளிக்கப்படும் என ஏசஸ் உறுதி அளித்துள்ளது.
6000mah திறன் கொண்ட பேட்டரி அளிக்கப்பட்டு இருந்தாலும், யூசர்களின் வசதிக்காக அதிவேக சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர ராக் போன் 7 சீரிஸின் எடை வெறும் 239 கிராம் ஆகும். 10.3mm அளவிலான தடிமனை கொண்டுள்ளது. ஏசஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த புதிய ராக் ஃபோன்களில் முன்பக்க ஸ்பீக்கர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன இதன் மூலம் கேமர்களுக்கு புதிய உத்வேகம் தரும் வகையில் இது இருக்கும் என கூறப்படுகிறது.