ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் வரிசையில் தற்போது புத்தம் புதிய ஆண்ட்ராய்டு 13 வெர்ஷன் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. . தற்போது கூகுள் பிக்சல் மொபைல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆண்ட்ராய்டு 13 ஆனது விரைவிலேயே சாம்சங் மற்றும் மற்ற மொபைல்களுக்கும் அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 12 வெர்ஷனை ஒப்பிடும்போது புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷனில் பல்வேறு புதிய வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஆண்ட்ராய்டு 13 இயங்கு தளத்தில் உள்ள சில வசதிகளை பற்றி இப்போது பார்ப்போம்.
நிறங்களை மாற்றிக் கொள்ளலாம் : ஆண்ட்ராய்டு 13 வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மெட்டீரியல் யூ என்ற வசதியின் மூலம் உங்களது மொபைலை முழுவதுமாக நீங்கள் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். புதிய வால்பேப்பர் நிறம் மற்றும் எழுத்துக்களின் நிறம் ஆகியவற்றையும் மாற்றிக் கொள்ளலாம். இதை செய்வதற்கு உங்களது ஹோம் ஸ்கிரீனை லாங் பிரஸ் செய்து பிறகு தோன்றும் வால்பேப்பர் அண்ட் ஸ்டைல் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
ஐகான்களை மாற்றிக் கொள்ளலாம் : மெட்டீரியல் யூ பயன்படுத்தி ஹோம் ஸ்கிரீனின் நிறத்தை மாற்றிக் கொள்ள முடியும். ஆண்ட்ராய்டு 12-ல் பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியானது, தற்போது வரை சோதனை முறையிலேயே இயங்கி வருகிறது. ஆனால் ஆண்ட்ராய்டு 13 வெர்ஷனில் இந்த வசதியானது முழுவதும் செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது. இதற்கும் ஹோம் ஸ்கிரீனை லாங் பிரஸ் செய்து அதன் பிறகு வால்பேப்பர் அண்ட் ஸ்டைல் என்பதை தேர்வு செய்ய வேண்டும். பிறகு ஸ்க்ரோல் டவுன் செய்து தீம் ஐகான்ஸ் என்பதை தேர்வு செய்து ஐகானை மாற்றிக் கொள்ளலாம்.
எளிமையான சர்ச் பார் : ஆண்ட்ராய்டு 13 வெர்ஷனில் ஹோம் ஸ்கிரீனில் உள்ள சர்ச் பாரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சர்ச் பாரில் டேப் செய்து ஏதேனும் தேடும்போது அது வெப் அல்லது நாம் தேடிய செயலியை இடைமுகத்தை பயன்படுத்தி திறக்கிறது. இதுவே ஆண்ட்ராய்டு 12 வெர்ஷனில் ஒப்பிடுகையில் ஏதேனும் ஒரு செயலியின் பெயரை உள்ளீடு செய்யும் பட்சத்தில் அது அந்த செயலியை திரையில் மேலே காண்பிக்கும்.
ஆனால் ஆண்ட்ராய்டு 13 வெர்ஷனில் நீங்கள் எதை உள்ளீடு செய்தாலும் கூகுள் தளத்தில் அதனை சர்ச் செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு உங்கள் மொபைலில் youtube செயலியை ஓபன் செய்ய வேண்டும் எனில் உங்கள் மொபைலில் மேலே உள்ள சர்ச் பாரில் “yout” என டைப் செய்தாலே youtube செயலானது உங்களுக்கு மேலே காண்பிக்கப்படும். ஆனால் தற்போதைய புதிய அப்டேட்டில் இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 13 வெர்ஷனில் உங்களது ஆப் டிராயரை ஸ்வைப் டவுன் செய்து சர்ச் எக்ஸ்பீரியன்ஸை மாற்றிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு மொபைலில் மேலே உள்ள சர்ச் பாரானது மொபைலில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள செயலிகளை கண்டறிய உதவுகிறது. எப்படி இருப்பினும் நீண்ட காலமாக ஆண்ட்ராய்டை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாற்றத்திற்கு பழக சிறிது காலம் ஆகலாம்.
நோட்டிபிகேஷனை பார்வையிட முடியும் : முன்னர் ஆண்ட்ராய்டு 12 வெர்ஷனில் நம்மால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குறிப்பிட்ட செயலிகளின் நோட்டிபிகேஷன்களை பிளாக் செய்து வைக்க முடியும். தற்போது ஆண்ட்ராய்டு 13 ல் புதிய அப்டேட்டில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. முதல் முறை நீங்கள் ஒரு செயலியை ஓபன் செய்யும்போது அது நோட்டிபிகேஷன்களை அனுப்ப வேண்டுமா என்றது போன்ற அறிவிப்பை கேட்கும்.
உங்களுக்கு தேவை இல்லை எனும் பட்சத்தில் நீங்கள் நோட்டிபிகேஷன் வருவதை ஆஃப் செய்து வைத்துவிடலாம். அதே சமயத்தில் அதன் பிறகு உங்களுக்கு நோட்டிபிகேஷன் ப்ளாக் செய்த அந்த செயலியில் இருந்து ஏதேனும் முக்கிய நோட்டிபிகேஷனை தவற விட்டதாக நீங்கள் எண்ணினால், மிக எளிதாகவே உங்களால் அவற்றை கண்டறிய முடியும். அதற்காக ஹோம் ஸ்கிரீனை லாங் பிரஸ் செய்து நோட்டிபிகேஷன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதிலிருந்து உங்களுக்கு தேவையான நோட்டிபிகேஷன் வசதிகளை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும்.
மல்டி டாக்கிங் வசதியில் மாற்றம் : ஆண்ட்ராய்டு 12 வேர்ஷனில் கொடுக்கப்பட்டிருந்த ஸ்ப்ளிட் ஸ்கிரீன் வசதியில் சில மாற்றங்களை கொண்டு ஆண்ட்ராய்டு 13 வெளிவர உள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஸ்ப்ளிட் ஸ்கிரீனை கொண்டு நீங்கள் எந்தவித செயலியை வேண்டுமானாலும் தேர்வு செய்து இரண்டாவது திறையில் வைத்துக் கொள்ள முடியும். அதாவது இரண்டாவது செயலியை நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கு நமது மொபைலில் ஹோம் ஸ்கிரீனுக்கு சென்று அதனை தேர்வு செய்ய முடியும்.
டெக்ஸ்ட் காபி செய்வதில் மாற்றம் : ஆண்ட்ராய்டு 13 வெர்ஷனில் நீங்கள் டெக்ஸ்டை கிளிப்போர்ட்டில் காப்பி செய்யும் பட்சத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் போது எவ்வாறு பாப் அப் போன்று வருமோ, அதுபோலவே நீங்கள் டெக்ஸ்டை காப்பி செய்யும் போதும் பாப் அப் வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வழக்கமான சீரற்ற காபி பேஸ்ட் வசதியை விட இது பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நீங்கள் டெக்ஸ்டை காபி செய்யும் போது, வேண்டுமென்றால் நீங்கள் அதனை எடிட் செய்து அதன் பிறகு கிளிப் போர்டிற்கு மாற்றிக் கொள்ளும் வசதியும் இதில் அளிக்கப்பட்டுள்ளது.
எளிமையாக கியூ ஆர் கோட் ஸ்கேன் செய்யும் வசதி : ஆண்ட்ராய்டு 13 ஸ்கேன் செய்வதற்கு மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நம்முடைய மொபைலில் வைஃபை மற்றும் புளூடூத் ஆகியவற்றை ஸ்க்ரோல் டவுன் செய்து ஆன் ஆப் செய்து கொள்வோமோ, அது போலவே இந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்யும் வசதியும் நம்மால் அதில் வைத்துக் கொள்ள முடியும். இதற்கு மொபைலில் உள்ள நோட்டிபிகேஷன் ஷேடை முழுவதுமாக விரிவுபடுத்தி, பிறகு அதில் உள்ள பென்சில் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இப்போது கியூ ஆர் கோட் ஸ்கேனர் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அதனை உங்கள் நோட்டிபிகேஷன் ஷேடில் நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு செயலுக்கும் தனி மொழி : இது அனைவருக்கும் ஏற்ற ஒரு வசதியாக இல்லாவிடினும் பல்வேறு மொழிகளில் பயன்படுத்தும் நபர்களுக்கு இது மிகவும் வசதியான ஒரு அப்டேட் ஆகும். ஆண்ட்ராய்டு 13 இல் ஒவ்வொரு தனிப்பட்ட செயலிக்கும் நம்மால் ஒரு மொழியில் தேர்வு செய்யும் வகையில் வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட செயலிக்கு நீங்கள் மொழியை தேர்வு செய்வதற்கு லாங்குவேஜ் அண்டு இன்புட் என்ற செட்டிங்கை தேர்வு செய்து அதில் ஆப் லாங்குவேஜ் என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
உங்களது மொபைலில் மல்டிபிள் லாங்குவேஜ் வசதி இருந்தால் மட்டும உங்களால் இந்த ஆப் லாங்குவேஜ் வசதி பயன்படுத்த முடியும். இந்த வசதியை பொறுத்தவரை ஆண்ட்ராய்டின் டெவலப்பர்கள் இதில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் வாடிக்கையாளருக்கு பிடித்த சில மொழியை அல்லது செயலியை பயன்படுத்த முடியாது நிலை வரலாம். ஆனால் நீங்கள் விரும்பும் மொழியில் இயங்கக்கூடிய செயலி இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக இது மிகவும் ஏற்ற ஒரு வசதியாகும்.
இவற்றைத் தவிர ஆண்ட்ராய்டு 13 ல் வேறு சில புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கூகுள் பிக்சல் மொபைல்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆண்ட்ராய்டு 13 வெர்ஷன் மிக விரைவிலேயே மற்ற ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் எண்ணமாக உள்ளது.
மேலே கூறியுள்ள வசதிகளை தவிர நோட்டிபிகேஷன்களுக்கு அளிக்கப்படும் அனுமதி உங்களது மீடியா பைல்களை ஆக்சஸ் செய்வதற்கான அனுமதி, புதிய மீடியா ப்ளேயருக்கான நோட்டிபிகேஷன் போன்ற பல்வேறு விதமான புதிய வசதிகள் ஆண்ட்ராய்டு 13-ல் அறிமுகப்படுத்தப்படும். எப்போது ஆண்ட்ராய்டின் புதிய வெர்ஷன் மற்ற மொபைல்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என வாடிக்கையாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.