செயற்கை நுண்ணறி தளங்கள், செயலிகள், பாட்ஸ் என்று மிகவும் பிரபலமாகிவிட்டன. இதில் chatgpt என்ற செயற்கை நுண்ணறிவு சமீபத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் தேடலுக்கே, chatgpt போட்டியாக இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் அமேசான் நிறுவனம் தனது ஊழியர்கள் chatgptயை யை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்
சமீபத்தில் அமேசான் ஊழியர்கள் தங்களுடைய அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக chatgptஐ பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் வேலைக்கான நேர்காணல் பற்றிய கேள்விகள், மென்பொருளுக்கான கோடிங், ட்ரைனிங் ஆவணங்களை உருவாக்குவது பற்றி பலவித முக்கியமான விஷயங்களைப் பற்றி அமேசான் ஊழியர்கள் செயற்கை நுண்ணரிவிடம் பதில் கோரியிருக்கிறார்கள்.
மிக மிக கடினமான கேள்விகளுக்கு கூட, கடினமான விஷயங்களை கூட chatgpt எளிதாக தீர்வுகளைக் கொடுக்கும். செயற்கை நுண்ணறிவு என்பது நாம் என்ன தகவலை வழங்குகிறோமோ அதை அனைத்தையும் சேகரிக்கும். இந்நிலையில், அமேசான் ஊழியர்கள் கேள்விகளை சேகரித்த chatgpt, அமேசான் நிறுவனத்தின் இன்டர்னல் தரவை போலவே செயல்பட்டது நிறுவனத்தின் கவனத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து, பிஸினஸ் இன்சைடர், அமேசான் தரப்பிலான கார்பரேட் வழக்கறிஞர்கள், அமேசான் ஊழியர்களுக்கு, chatgptஐ பயன்படுத்தக்கூடாது மற்றும் மிகவும் சென்சிட்டிவான தகவல்களை வழங்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் நாம் என்ன தகவலை உள்ளிடுகிறோமோ அந்த தகவல்களை chatgpt ட்ரைனிங் டேட்டாவாக பயன்படுத்திக் கொள்ளும். எனவே நம்முடைய முக்கியமான, கான்ஃபிடியன்ஷல் தகவல் எதையுமே பகிரக்கூடாது என்று அமேசான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஊழியர்கள் வழங்கிய இன்டர்னல் தகவல்களைப் போலவே, இந்த ai தீர்வுகளை வழங்கியிருப்பதால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் chatgptயை பயன்படுத்திய அமேசான் ஊழியர்கள், இந்த செயற்கை நுண்ணறிவின் திறன்கள் மற்றும் இந்த செயலியால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை பார்த்து வியந்து போயிருக்கிறார்கள் என்பதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. chatgptஐ சோதனை செய்த பார்த்த ஊழியர்கள், கஸ்டமர் சப்போர்ட் கேள்விகளுக்கு மிக சிறப்பான பதில்களை வழங்குகிறது மற்றும் மிக மிகவும் சிறப்பான பயிற்சி ஆவணங்களை உருவாக்குகிறது என்று தெரிவித்துள்ளார்கள். அது மட்டுமில்லாமல் அமேசான் நிறுவனத்தில் பணியாற்ற என்ஜினியர்கள் தாங்கள் எழுதிய கோடிங்கை இந்த செயலிக்கு அனுப்பி அதை மதிப்பாய்வு செய்தனர்.
இவை அனைத்துமே அமேசான் நிறுவனத்தின் மிகவும் கான்ஃபிடியன்ஷியல் தகவல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் chatgpt ஒரு சில இடங்களில் தடுமாறியது என்பதும் அறிக்கையில் பதிவாகி இருக்கிறது. மிக குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்ட இந்த செயற்கை நுண்ணறிவு தற்போது சில இடங்களில் தடுமாறினாலும் அடுத்த சில மாதங்களில் இதனுடைய திறன் பல மடங்கு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக கருதப்படும் இந்த செயற்கை நுண்ணறிவை எதிர்கொள்வதற்கு, கூகுள் தற்போது புதிய செயற்கை நுண்ணறிவு சாட்பாடடை உருவாக்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆனால், chatgptஐ மேலும் வளர்க்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளது.