Amazon-ல் கடந்த மே 4-ஆம் தேதி தொடங்கிய சம்மர் சேல் தற்போது அனைத்து யூஸர்களுக்கும் லைவில் உள்ளது. மே 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த ஸ்பெஷல் சேலின் போது ஸ்மார்ட் போன்ஸ், டேப்லெட்ஸ், லேப்டாப்ஸ், TWS இயர்பட்ஸ் மற்றும் பல தயாரிப்புகளில் டீல்ஸ் மற்றும் ஆஃபர்களை அமேசான் வழங்குகிறது. ஐபோன் 14, ஐபோன் 13, மேக் டிவைஸ்கள், ஐபாட்ஸ் மற்றும் அக்சஸரீஸ் உள்ளிட்ட சில ஆப்பிள் தயாரிப்புகளிலும் நல்ல சலுகைகளை அமேசான் வழங்குகிறது. ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கு Amazon இந்த சம்மர் சேலில் வழங்கும் ஆஃபர்களை இப்போது பார்க்கலாம்,
ஆப்பிள் ஐபோன் 14 : ரூ.1,000 வங்கி தள்ளுபடி உட்பட ரூ.66,999-க்கு இந்த மொபைல் கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 14 பொதுவாக ரூ71,999-க்கு விற்கப்படுகிறது. இருப்பினும் இந்த ஸ்பெஷல் விற்பனையின் போது இதன் விலை ரூ.67,999-ஆக குறைந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கினால் ரூ.1,000 கூடுதல் தள்ளுபடியை பெறலாம். இந்த மொபைல் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது மற்றும் Apple A15 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
ஆப்பிள் ஐபாட் ப்ரோ எம்2: இந்த iPad Pro M2-ஆனது ProMotion True Tone மற்றும் P3 வைட் கலர் காமட்டுடன் கூடிய 11-இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 8-கோர் CPU மற்றும் 10-core GPU உடன் கூடிய M2 சிப் மூலம் இயங்குகிறது. இந்த டிவைஸ் ரூ.1,500 வங்கி தள்ளுபடி உட்பட ரூ.84,400-க்கு அமேசானில் கிடைக்கிறது.
ஆப்பிள் ஐபேட் மினி : Apple iPad Mini டிவைஸானது A15 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8.3-இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டில் 12எம்பி வைட் பேக் கேமரா மற்றும் 12எம்பி அல்ட்ரா-வைட் ஃப்ரன்ட் கேமராவை கொண்டுள்ளது. இது ரூ.1,500 வங்கி தள்ளுபடி உட்பட ரூ.44,400-க்கு கிடைக்கும்.
ஆப்பிள் வாட்ச் எஸ்இ (ஜிபிஎஸ் + செல்லுலார், 40 மிமீ): Apple Watch SE செல்லுலார் எடிஷனானது பில்ட்-இன் ஹெல்த் & ஃபிட்னஸ் மானிட்டரிங், ரியல்-டைம் ஹெல்த் ட்ராக்கிங், ட்ராப் டிடெக்ஷன் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வருகிறது. இது தவிர இந்த வாட்ச்சில் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச் ரூ.1,500 வங்கி தள்ளுபடி உட்பட ரூ.21,400 என்ற விலையில் கிடைக்கிறது.
ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா : ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவானது ஆப்பிளின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அம்சம் நிறைந்த வாட்ச் ஆகும். இது டைட்டானியம் கேஸுடன் Rugged-ஆன டிசைனை கொண்டுள்ளது மற்றும் ஃபிட்னஸ் டிராக்கர், ஜிபிஎஸ், ஆக்ஷன் பட்டன் மற்றும் மேம்படுத்தப்பட்ட பேட்டரி ஆயுள் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. இந்த வாட்ச் அமேசானின் ஸ்பெஷல் சேலில் ரூ.1,500 வங்கி தள்ளுபடி உட்பட ரூ.76,090-க்கு கிடைக்கிறது.
ஆப்பிள் மேக்புக் ஏர் எம்1 : Apple MacBook Air-ஆனது M1 சிப்செட், 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் வருகிறது. இந்த லேப்டாப் 13.3-இன்ச் ரெடினா டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் 18 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது. அமேசானின் ஸ்பெஷல் சேலில் ரூ.2,000 வங்கி தள்ளுபடி உட்பட ரூ.79,900-க்கு இந்த லேப்டாப் கிடைக்கிறது.