முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » ஓடிடி யூசர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான்.. நெட்பிளிக்ஸ் நிலைமை என்ன? வெளியானது முக்கிய அறிவிப்பு!

ஓடிடி யூசர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான்.. நெட்பிளிக்ஸ் நிலைமை என்ன? வெளியானது முக்கிய அறிவிப்பு!

அமேசான் ஓடிடி தளம் கட்டணத்தை உயர்த்தி யூசர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது

 • 18

  ஓடிடி யூசர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான்.. நெட்பிளிக்ஸ் நிலைமை என்ன? வெளியானது முக்கிய அறிவிப்பு!

  உலகெங்கிலும் அமேசான் நிறுவனமானது தனது அமேசான் பிரைமிற்கான சந்தா விலையை அவ்வபோது மாற்றி அமைத்து வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான் பல்வேறு இடங்களிலும் தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் சப்ஸ்க்ரிப்ஷனை அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மிக அதிக அளவில் புதிய சந்தாதாரர்களை தனது பக்கம் கட்டி இழுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

  MORE
  GALLERIES

 • 28

  ஓடிடி யூசர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான்.. நெட்பிளிக்ஸ் நிலைமை என்ன? வெளியானது முக்கிய அறிவிப்பு!

  அதே சமயத்தில் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு, சந்தா விலையை அவ்வப்போது உயர்த்தியும் வருகிறது. குறிப்பாக சமீப காலங்களில் இந்தியாவில் பிரைம் சப்ஸ்க்ரிப்ஷனுக்கான விலையை அவ்வப்போது உயர்த்தி வந்த அந்நிறுவனம் மீண்டும் ஒருமுறை அமேசான் பிரைமிற்கான சந்தா விலையை உயர்த்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை பெறுவதற்கான ஆரம்ப கட்டணம் ரூபாய் 299 ஆக உள்ளது. இது ஒரு மாதத்திற்குரிய கட்டணமாகும். இதற்கு முன்னர் டிசம்பர் 2021 வரை இதன் விலை ரூபாய் 129 ஆகும்.

  MORE
  GALLERIES

 • 38

  ஓடிடி யூசர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான்.. நெட்பிளிக்ஸ் நிலைமை என்ன? வெளியானது முக்கிய அறிவிப்பு!

  அதன்படி மூன்று மாதங்களுக்கான அமேசான் பிரைம் சப்ஸ்கிரிப்ஷனுக்கான விலை தற்போது ரூபாய் 599 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதன் விலை ரூபாய் 459 ஆகும். இது பழைய விலையை விட 140 ரூபாய் கூடுதலாகும்.இந்த விலை மாற்றத்தில் உள்ள ஒரே நல்ல விஷயம் என்னவெனில், நீண்டகால திட்டங்களுக்கான கட்டணங்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் கட்டணம் ரூபாய் 1499 ஆகவும், ஒரு ஆண்டிற்கான பிரைம் லைட் பிளானிர்க்கான கட்டணம் ரூபாய் 999 ஆகும்..

  MORE
  GALLERIES

 • 48

  ஓடிடி யூசர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான்.. நெட்பிளிக்ஸ் நிலைமை என்ன? வெளியானது முக்கிய அறிவிப்பு!

  அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் பெறுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? : அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை கட்டணம் செலுத்தி பெறுபவர்களுக்கு பிரைம் சந்தாதாரராக ஆக இல்லாதவர்களை விட அதிவேக டெலிவரி செய்யப்படும். இவற்றை தவிர்த்து பிரைம் வீடியோ, பிரைம் மியூசிக், ஆகியவற்றிற்கான உரிமமும் அளிக்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 58

  ஓடிடி யூசர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான்.. நெட்பிளிக்ஸ் நிலைமை என்ன? வெளியானது முக்கிய அறிவிப்பு!

  அமேசானைப் போலவே நெட்ப்ளிக்ஸ் இந்தியாவில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக தற்போது வரை சந்தா கட்டணத்தில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நெட்பிக்ஸ் அளிக்கும் நான்கு திட்டங்களில் ஏதேனும் ஒன்றுக்கு கட்டணம் செலுத்தி நீங்கள் அதன் சேவைகளை அனுபவிக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 68

  ஓடிடி யூசர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான்.. நெட்பிளிக்ஸ் நிலைமை என்ன? வெளியானது முக்கிய அறிவிப்பு!

  அடிப்படை திட்டமாக வெறும் மொபைலில் மட்டும் ஆக்சஸ் செய்யும்படி இருக்கும் திட்டத்திற்கு ரூபாய் 149 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு மொபைல் அல்லது ஒரு டேப்லெட் என ஒரு நேரத்தில் ஒரே ஒரு டிவைசில் மட்டும் உங்களால் நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க முடியும்.

  MORE
  GALLERIES

 • 78

  ஓடிடி யூசர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான்.. நெட்பிளிக்ஸ் நிலைமை என்ன? வெளியானது முக்கிய அறிவிப்பு!

  இதற்கு அடுத்தபடியாக பேசிக் பிளான் எனப்படும் 199 ரூபாய் கட்டனமானது. இந்தத் திட்டத்தில் நீங்கள் இணைந்து விட்டால் எச்டி குவாலிட்டியுடன் ஒரு டிவைஸில் மட்டும் நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க முடியும். மேலும் மொபைல் மட்டுமல்லாமல் டிவி லேப்டாப் போன் எது ஒன்றில் வேண்டுமானாலும் நீங்கள் நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 88

  ஓடிடி யூசர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான்.. நெட்பிளிக்ஸ் நிலைமை என்ன? வெளியானது முக்கிய அறிவிப்பு!

  ரூபாய் 499க்கு ஸ்டாண்டர்ட் பிளானில் நீங்கள் உங்களை இணைத்துக் கொண்டால், ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ் களில் ஃபுல் ஹெச்டி ரெசொல்யூஷன் உடன் உங்களால் நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க முடியும். கடைசியாக 649 ரூபாய்க்கு நெட்ஃபிக்ஸ் பிரிமியம் திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் ஒரே நேரத்தில் நான்கு டிவைஸ்களில் அல்ட்ரா எச்டி ரெசல்யூசனுடன் நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம்.

  MORE
  GALLERIES