முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » வாட்ச் பிரியரா நீங்க..? அசத்தல் அம்சங்களுடன் அமேஸ்ஃபிட் ஸ்மார்ட் வாட்ச்…

வாட்ச் பிரியரா நீங்க..? அசத்தல் அம்சங்களுடன் அமேஸ்ஃபிட் ஸ்மார்ட் வாட்ச்…

புத்தம் புதிய பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் தனது புதிய ஸ்மார்ட் வாட்சை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது அமேஸ்ஃபிட் நிறுவனம். அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

 • 16

  வாட்ச் பிரியரா நீங்க..? அசத்தல் அம்சங்களுடன் அமேஸ்ஃபிட் ஸ்மார்ட் வாட்ச்…

  காலம் மாற மாற மனிதனின் ரசனையும், அதைப் பொறுத்து தேவையும் மாறிக் கொண்டே வருகிறது. முன்பெல்லாம் நேரத்தை அறிந்து கொள்வதற்காக மட்டுமே கையில் கடிகாரம் கட்டியிருந்தோம். ஆனால் இப்போது நேரம் பார்ப்பதை தவிர்த்து வேறு பல வசதிகளுக்காக கடிகாரம் கட்டும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அது தான் ஸ்மார்ட் வாட்ச். நம் உடல் ஆரோக்கியம் தொடர்பான விபரங்களை அவ்வப்போது  நாமே அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. அதை பூர்த்தி செய்யும் முக்கியமான வேலையை துல்லியமாக செய்கின்றன ஸ்மார்ட் வாட்ச்கள். அதனால் தான் இப்போது எல்லோரும் ஸ்மார்ட் வாட்சை விரும்புகிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 26

  வாட்ச் பிரியரா நீங்க..? அசத்தல் அம்சங்களுடன் அமேஸ்ஃபிட் ஸ்மார்ட் வாட்ச்…

  இரண்டாயிரம் மூன்றாயிரம் ரூபாய் தொடங்கி லட்சம் ரூபாய் வரை ஸ்மார்ட் வாட்ச்கள் கிடைக்கின்றன. அந்த வரிசையில் அமேஸ்ஃபிட் ஜிடிஆர் மினி எனும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அமேஸ்ஃபிட் நிறுவனம்.

  MORE
  GALLERIES

 • 36

  வாட்ச் பிரியரா நீங்க..? அசத்தல் அம்சங்களுடன் அமேஸ்ஃபிட் ஸ்மார்ட் வாட்ச்…

  அமேஸ்ஃபிட் ஜிடிஆர் மினி ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 1.28-இன்ச் (416×416 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்பிளே வசதி உள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் எச்டி ரெசல்யூஷன், வளைந்த கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக காம்பேக்ட் டிசைன் மற்றும் வட்ட வடிவம் கொண்டிருக்கிறது இந்த அட்டகாசமான அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் மாடல். இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் வலதுபுறம் இருக்கும் வட்ட வடிவ டயல் மூலம் மெனு மற்றும் இதர ஆப்ஷன்களை இயக்க முடியும். இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபிரேம் கொண்டுள்ளது. இந்த வாட்சில் புளூடூத் 5.2 உள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் துல்லியமான GPS கண்காணிப்பு திறன் கொண்டது.

  MORE
  GALLERIES

 • 46

  வாட்ச் பிரியரா நீங்க..? அசத்தல் அம்சங்களுடன் அமேஸ்ஃபிட் ஸ்மார்ட் வாட்ச்…

  இந்த ஸ்மார்ட் வாட்சின் பேட்டரியை பொறுத்தவரை மற்ற வாட்ச்களின் பேட்ரியை விட மிகத்தரமானது என்றே சொல்லலாம். இந்த அமேஸ்ஃபிட் ஜிடிஆர் மினி ஸ்மார்ட்வாட்ச் 280 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.  ஸ்மார்ட்வாட்ச் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் பேட்டரி சேவிங் மோடில் அதிகபட்சம் 20 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்குமாம். அதே போல், வழக்கமான பயன்பாடுகளின் போது இந்த ஸ்மார்ட்வாட்ச் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் 120-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 56

  வாட்ச் பிரியரா நீங்க..? அசத்தல் அம்சங்களுடன் அமேஸ்ஃபிட் ஸ்மார்ட் வாட்ச்…

  இதுதவிர ஹார்ட் ரேட் மானிட்டரிங், ஸ்டிரெஸ் லெவல் மேப்பிங், SpO2, 5 satellite positioning systems, BioTracker PPG ஆப்டிகல் சென்சார் உள்ளிட்ட வியக்க வைக்கும் அம்சங்களுடன் இந்த அமேஸ்ஃபிட் ஜிடிஆர் மினி ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. மேலும், 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, கமரா கண்ட்ரோல் மற்றும் மியூசிக் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் இந்த ஸ்மார்ட் வாட்சில் இருக்கிறது. மேலும் 80-க்கும் அதிகமான வாட்ச் பேஸ் தீம்கள் இதில் இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 66

  வாட்ச் பிரியரா நீங்க..? அசத்தல் அம்சங்களுடன் அமேஸ்ஃபிட் ஸ்மார்ட் வாட்ச்…

  விலையைப் பொறுத்தவரை இந்த வாட்ச் 9,999 ரூபாய் முதல் கிடைக்கும் என்ற சொல்லப்படுகிறது. மிட்நைட் பிளாக், மிஸ்டி பின்க் மற்றும் புளூ ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் இந்த வாட்சை அமேசான் தளத்தில் வாங்கமுடியும்.

  MORE
  GALLERIES