மைக்ரோசாஃப்ட் முதலீடு செய்திருக்கும் சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் பார்ட் என்ற செயற்கை நுண்ணறிவை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே chatgpt உலகை வியப்பில் ஆழ்த்தி வந்துள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு என்பது நமக்கு புதிதல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்னரே பல விதமான செயற்கை நுண்ணறிவு பாட்ஸ் மற்றும் அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தன. அதை பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
எலிசா (ELIZA) : 1960களில் எலிஸா என்ற நேச்சுரல் லாங்குவேஜ் பிராசர், உரையாடல்களை ஊக்குவிக்கும் புரோகிராம் ஒன்றை MIT செயற்கை ஆய்வகத்தில் ஜோசப் வில்சன்பாம் என்ற ஜெர்மானிய-அமெரிக்க கணினி அறிவியல் ஆய்வாளரால் உருவாக்கப்பட்டது. ELIZA தான் உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு என்பது குறிப்பிடத்தக்கது. இது உலகம் முழுவதிலுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. உரையாடல்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு பேட்டர்னையும் இணைத்து அதற்கான மாற்று முறைகளை பயன்படுத்தியது.
பாரி (PARRY) : எலிசாவுக்கு அடுத்தபடியாக, PARRY என்ற ஒரு ai சாட்பாட் ஸ்டான்ஃபார்ட் பல்கலைகழகத்தின் உளவியல்-மனநல மருத்துவரான கென்னெத் கோல்பியால் உருவாக்கப்பட்டது. உரையாடல்களை ஸ்டிமுலேட் செய்வதில், இது எலிசாவின் மேம்பட்ட அம்சம் என்று கூறலாம். இந்த பாரி, சீசோஃபெர்னியாவால் பாதிக்கப்படும் நபர்களை ஸ்டிமுலேட் செய்யவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், இயற்கைக்கு மாறாக, நம்பிக்கைகள் மற்றும் கான்சப்ட்களுக்கு ஏற்றவாறு செயல்படும் ஒரு கொடூரமான மாடலாக இருந்தது. இது மனிதர்களைப் போலவே செயல்படுகிறதா என்பதை பல விதங்களில் சோதிக்கப்பட்டது.
ராக்டர் (Racter) : இன்று உலகை அசத்தும் chatgpt உருவாக்கப்படுவதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே, ஒரு ai கணினி புரோகிராம், சுயமாக ஒரு புத்தகத்தை எழுதியது. மைன்ட்ஸ்கேப் ஆங்கில வாக்கியங்களை உருவாக்க, ராக்டர் என்ற இந்த செயற்கை நுண்ணறிவை உருவாக்கியது. இது தான் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கம்ப்யூட்டர் மாடலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மிகக் குறைவான வளங்களைப் பயன்படுத்தி, கவிதைகள், குறுங்கதைகள் அடங்கிய புத்தகங்களை எழுதியது.
ஜாபர்வாக்கி (Jabberwacky) : ரொலோ கார்பென்ட்டர் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் உருவாக்கியது தான், ஜாபர்வாக்கி என்ற சாட்பாட். இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு நோக்கங்களுக்கு உருவாக்கப்பட்டது. ரோபோட்களுடன் இணைக்கப்பட்டு , நகைச்சுவை நிறைந்த உரையாடல்களை வழங்கியது. இதுவும், பேட்டர்ன் மேட்சிங் என்ற அடிப்படையில் செயல்பட்டது.