டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தப் போவதாக நீண்ட காலமாகவே சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வந்த நிலையில் முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தனது ப்ரீபெயிட் திட்டத்திற்கான ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. குறிப்பாக ஆரம்ப நிலை ரீசார்ஜ் கட்டணங்களுக்கு மட்டும் விலையை உயர்த்தி உள்ளது. குஜராத், கொல்கட்டா, மத்திய பிரதேஷ் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
விலை உயர்வு : முதற்கட்டமாக ஏர்டெல் ப்ரீபெயிட் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் 99 ரூபாய் ரீசார்ஜ் பிளானை நிறுத்தி, அதற்கு பதிலாக 155 ரூபாய்க்காண ரிசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வங்கி ஓ டி பி அல்லது மொபைல் எண்ணை ஆக்டிவாக வைத்திருப்பதற்காக மட்டும் மாதம் மாதம் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து வந்த வாடிக்கையாளர்கள் இனி 155 ரூபாய்க்கு ரீசார் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதர ரீசார்ஜ் பிளான்கள்.. ரூபாய் 155 ப்ரீபெய்ட் பிளான் : இத்திட்டத்தில் 24 நாட்களுக்கான வேலிடிட்டியுடன் 1 ஜிபி டேட்டாவும் அளிக்கப்படுகிறது. இதைத் தவிர அன்லிமிடெட் கால் மற்றும் 300 இலவச எஸ் எம் எஸ் அளிக்கப்படுகிறது. இவற்றுடன் வின்க் சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் இலவச ஹலோ டியூன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. 1 ஜிபி டேட்டாவானது முடிவடைந்த நிலையில் கூடுதல் டேட்டாவிற்கு வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். இலவச டேட்டா முடிந்த பிறகு செலவு செய்யப்படும் ஒவ்வொரு எம்பிக்கும் 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் இதே போலவே லோக்கல் எஸ் எம் எஸ் க்கு 1 ரூபாயும், எஸ் டி டி எஸ் எம் எஸ் க்கு 1.50 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.