முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » செல்போன் வாங்க போறீங்களா.? கம்மி விலையில பக்காவான 5G ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்!

செல்போன் வாங்க போறீங்களா.? கம்மி விலையில பக்காவான 5G ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்!

மார்க்கெட்டில் ஏராளமான 5ஜி ஃபோன்கள் கிடைப்பதால் சிறந்த போனை தேர்ந்தெடுப்பதில் உங்களுக்கு குழப்பம் இருக்கலாம். உங்கள் குழப்பத்தை தீர்ப்பதற்காகவே இந்த பதிவு.

  • 19

    செல்போன் வாங்க போறீங்களா.? கம்மி விலையில பக்காவான 5G ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்!

    புது ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா... அப்போ நல்ல 5ஜி போனா பார்த்து வாங்குங்க. 5ஜி சேவை கூடிய விரைவில் வர உள்ளதால் சிறந்த 5ஜி போனை வாங்குவது நல்ல யோசனையாக இருக்கும். நாளுக்கு நாள் 5ஜி வேகமானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆகையால் உங்களுடைய போன் 5ஜி நெட்வொர்க்குடன் இணைகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. 15000 குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 29

    செல்போன் வாங்க போறீங்களா.? கம்மி விலையில பக்காவான 5G ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்!

    Samsung Galaxy M15 5G : இந்த போன் சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பு ஆகும். மொபைல் விரும்பிகளுக்கு Samsung Galaxy M15 5G ஒரு சிறந்த முதலீடாக அமையும். இந்த ஸ்மார்ட் போனில் தென் கொரிய பிராண்டை சேர்ந்த கொரில்லா கிளாஸ் 5 டிஸ்ப்ளேவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் 6000mAh பேட்டரி மற்றும் 25 W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4GB+128GB மற்றும் 6GB+128GB போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. 6.6 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த ஃபோனில் 50 MP+ 2 MP + 2 MP ரேர் கேமரா மற்றும் 13 MP ஃபிரண்ட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 13 மூலம் இயங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 39

    செல்போன் வாங்க போறீங்களா.? கம்மி விலையில பக்காவான 5G ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்!

    iQOO Z6 Lite 5G : இரண்டு ஸ்டைலான கலர்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் போன் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியானது. வெளியான நாளிலிருந்து சிறந்த ஃபீட்பேக்குகளை பெற்று வருகிறது. மிகவும் ஸ்லிம்மாக வரும் இந்த போனை எடுத்து செல்வது எளிது. இந்த போன் 6.58 இன்ச் டிஸ்ப்ளே, Snapdragon 4 Gen 1 ப்ராசஸர் மற்றும் 5000 mAh பேட்டரி ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் இந்த ஃபோனில் 50 MP+ 2 MP ரேர் கேமரா மற்றும் 8 MP ஃபிரண்ட் கேமரா உள்ளது. 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 49

    செல்போன் வாங்க போறீங்களா.? கம்மி விலையில பக்காவான 5G ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்!

    Samsung Galaxy M13 : ஒருவேளை நீங்கள் குறைவான பட்ஜெட், அதேசமயம் தரமான ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இந்த போனில் பிளாஸ்டிக் பாடி மற்றும் ட்ரிப்பிள் கேமரா செட் ஆப் ஆகியவை உள்ளது. கேமராவைப் பொறுத்தவரை 50 MP+ 2 MP + 2 MP ரேர் கேமரா மற்றும் 8 MP ஃபிரண்ட் கேமரா உள்ளது. இதில் 6000mAh பேட்டரி மற்றும் 15 W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் உள்ளது. 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. அது போக மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக ஸ்டோரேஜை 1TB வரை எக்ஸ்டெண்ட் செய்து கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 59

    செல்போன் வாங்க போறீங்களா.? கம்மி விலையில பக்காவான 5G ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்!

    Redmi 11 Prime 5G : இந்தியாவில் கிடைக்கக்கூடிய சிறந்த பிராண்டட் ஸ்மார்ட்போன்களில் Redmi 11 Prime 5G ஒன்றாகும். இந்த மாடல் செப்டம்பர் 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்டது. இது இரண்டு கலர்கள் மற்றும் ஸ்டோரேஜ் வகைகளுடன் கிடைக்கிறது. அட்டகாசமான டிஸ்ப்ளே, கட்டிங் எஜ் கேமரா செட்டப் மற்றும் சிறந்த பேட்டரி வடிவமைப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் 6.58 FHD இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 5000 mAh பேட்டரியுடன் கூடிய இந்த போனில் 50 MP+ 2 MP ரேர் கேமரா மற்றும் 8 MP ஃபிரண்ட் கேமரா உள்ளது. மேலும் 4 GB RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 69

    செல்போன் வாங்க போறீங்களா.? கம்மி விலையில பக்காவான 5G ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்!

    Realme Narzo 50 5G : 5000 mAh பேட்டரியுடன் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் 4GB RAM இன்டர்நல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. நீடித்து நிற்கும் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வலிமையான ப்ராசஸர் ஆகியவை இந்த போனின் சிறப்பம்சங்கள். 6.6 இன்ச் அல்ட்ரா ஸ்மூத் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போனில் 48 MP+ 2 MP ரேர் கேமரா மற்றும் 8 MP ஃபிரண்ட் கேமரா உள்ளது.

    MORE
    GALLERIES

  • 79

    செல்போன் வாங்க போறீங்களா.? கம்மி விலையில பக்காவான 5G ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்!

    POCO M4 Pro 5G : அட்டகாசமான அம்சங்களுடனான ஒரு ஸ்மார்ட்போனை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த போன் உங்களுக்கானது. Minimal lag-உடன் கூடிய மீடியாடெக் டைமெண்சிட்டி 810 SoC மூலம் இந்த போன் இயங்குகிறது. பார்ப்பவரை கவரக்கூடிய நிறம் மற்றும் ஸ்டைலான அமைப்புடன் கூடிய இந்த போன் 5000 mAh பேட்டரி, 6.6 இன்ச் FHD + டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அதுபோக 50 MP+ 8 MP ரேர் கேமரா மற்றும் 16 MP ஃபிரண்ட் கேமரா உள்ளது. மேலும் 4 GB RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 89

    செல்போன் வாங்க போறீங்களா.? கம்மி விலையில பக்காவான 5G ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்!

    Realme 8i 5G : ஒரு டீசன்ட்டான பட்ஜட்டில் சிறப்பான ஸ்மார்ட்போன் என்றால் அது Realme 8i 5G தான். நீங்கள் கொடுத்த பணத்திற்கு ஏற்ற தரமான ஸ்மார்ட்போன் இது. பிரண்ட் கேமராவை பிட் செய்யும் வகையில் இந்த போனானது பஞ்ச் போல் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த போனில் 5000 mAh பேட்டரி, 6.6 இன்ச், 2408 × 1080 FHD + டிஸ்ப்ளே, 50 MP+ 8 MP ரேர் கேமரா மற்றும் 16 MP ஃபிரண்ட் கேமரா போன்ற அம்சங்கள் உள்ளது. மேலும் 4 GB RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 99

    செல்போன் வாங்க போறீங்களா.? கம்மி விலையில பக்காவான 5G ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்!

    Lava Blaze 5G : Lava Blaze 5G ஸ்மார்ட்போன் 4 GB மற்றும் 6 GB ஆகிய இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது. இந்த போன் கிளாஸ் பிளாக், கிளாஸ் ப்ளூ மற்றும் கிளாஸ் கிரீன் கலர் ஆப்ஷன்கள் போன்ற அம்சங்களை வழங்குகிறது. கூடுதலாக ஃபிளாட் எட்ஜ் வடிவமைப்பு மற்றும் வாட்டர் டிராப் நாச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 6.5 இன்ச் HD + டிஸ்ப்ளேவுடன் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் 2.5D கர்வ்டு ஸ்கிரீனைக் கொண்டுள்ளது. ரேர் கேமராவில் 50 MP+ 8 MP + VGA மற்றும் ஃபிரண்ட் கேமரா 8 MP ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இதில் 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES