4G சர்விஸ் சரியாக வேலை செய்யாத பகுதிகள் நாட்டில் இன்னும் உள்ளன. நீங்கள் உங்கள் மொபைல் ஃபோனில் நெட்வொர்க் சிக்கல்களை எதிர்கொண்டால், அந்த நேரத்தில் ட்ரை செய்து பார்க்க கூடிய சில அடிப்படை டிப்ஸ்கள் இருக்கின்றன. முதலில் மொபைல் நெட்வொர்க் கனெக்ட் ஆகவில்லை என்றதுமே, மொபைல் டேட்டாவை ஆஃப் செய்து விட்டு மீண்டும் ஒருமுறை ஆன் செய்வோம். இதை தவிர கீழ்காணும் டிப்ஸ்கள் உங்களுக்கு உதவியாக இருக்க கூடும்.
ஏரோபிளேன் மோட் : மொபைல் டேட்டா கனெக்ட் ஆகாமல் நீங்கள் சிக்கலை சந்தித்தால், உங்கள் மொபைலில் இருக்கும் airplane mode-ஐ ஆன் செய்து விடுங்கள். ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் airplane mode-ஐ ஆஃப்செய்து விட்டு இப்போது உங்கள் மொபைல் டேட்டாவை ஆன் செய்து பாருங்கள். பெரும்பாலான நேரங்களில் இந்த ட்ரிக் மொபைல் டேட்டா நெட்வொர்க் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
சிம் கார்டை ரீ-இன்செர்ட் செய்யவும் : மொபைல் டேட்டா கனெக்ட் ஆகாமல் உங்களை கடுப்பேத்தினால் நீங்கள் செய்ய வேண்டிய மற்றொரு சிம்பிள் ட்ரிக், உங்கள் மொபைலில் போடப்பட்டிருக்கும் சிம் ஸ்லாட்டை ஓபன் செய்து சிம்மை எடுத்து ட்ராக் டேமேஜ் ஆகாமல் சுத்தமான துணியால் துடைத்து கொள்ளுங்கள். பிறகு மீண்டும் உங்களது சிம்மை மீண்டும் சிம் ஸ்லாட்டில் ஃபிக்ஸ் செய்து இன்ஸெர்ட் செய்யவும். இது உங்கள் சிக்கலை உடனடியாக தீர்க்க உதவலாம்.
டூயல்-சிம் என்றால்... உங்கள் மொபைலில் நீங்கள் டூயல்-சிம் கார்டுகள் வைத்திருந்தால் ஒரு சிம்மில் நெட்ஒர்க் கனெக்டிவிட்டி சிக்கலை எதிர் கொண்டால், கிடைக்கக்கூடிய சிறந்த நெட்வொர்க்கை தேர்வு செய்ய ஃபோனில் இருக்கும் மற்றொரு சிம்மில் இருந்து மொபைல் டேட்டாவை இயக்கி கொள்ளுங்கள். இதை நீங்கள் மேனுவலாக செய்யாமல் Best available network ஆப்ஷனை செலக்ட் செய்தால் ஒரு நெட்ஒர்க்கில் சிக்கலை எதிர்கொண்டால், அது ஆட்டோமேட்டிக்காக மற்றொரு சிம் நெட்ஒர்க்கை எடுத்து கொள்ள கூடும்.
மொபைல் நெட்வொர்க் லிமிட்டை செக் செய்யவும் : ஹை குவாலிட்டி வீடியோக்களை ப்ளே செய்து பார்ப்பதால் அல்லது அதிகமாக இன்டர்நெட் பயன்படுத்துவதால் டெய்லி மொபைல் டேட்டா லிமிட் சீக்கிரமே தீர்ந்து விடுகிறது. இது தெரியாமல் நம்மில் பலர் திடீரென மொபைல் டேட்டா சரியாக வேலை செய்யவில்லை, நெட் ஸ்பீட் ஸ்லோவாகி விட்டது என யோசிப்போம். எனினும் நீங்கள் பயன்படுத்தும் டெலிகாம் நிறுவனங்கள் டெய்லி மொபைல் டேட்டா லிமிட் காலியாவதற்கு முன் அலெர்ட் மெசேஜ்களை அனுப்புகின்றன. அவற்றை சரிபார்த்து கொள்ளுங்கள்.
மொபைல் அப்டேட் : நிறைய மொபைல் யூஸர்கள் தங்கள் டிவைஸிற்கான சாஃப்ட்வேர் அப்டேட் குறித்து பெரிதாக கண்டு கொள்வதில்லை. எல்லா சாஃப்ட்வேர் அப்டேட்டும் மொபைலுக்கு தேவை இல்லை என்றாலும், ஒருசில அப்டேட்ஸ்கள் மொபைல் டேட்டா கனெக்டிவிட்டிக்கு அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும். எனவே அப்டேட்ஸ்களை தவறவிடாமல் செய்வது டேட்டா கனெக்டிவிட்டியை பூஸ்ட் செய்ய உதவுகிறது.