முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » இந்தியாவில் 47 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்... எதற்காக தெரியுமா?

இந்தியாவில் 47 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்... எதற்காக தெரியுமா?

whatsapp Accounts | இந்தியாவில் மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 47 லட்ச வாட்சப் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.

  • 14

    இந்தியாவில் 47 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்... எதற்காக தெரியுமா?

    வாட்ஸ் ஆப் என்பது தற்போதுள்ள டிஜிட்டல் உலகில் அனைவரும் எளிதில் பயன்படுத்தக் கூடிய மிகவும் பிரபலமான ஒரு மெசேஜிங் ஆப் ஆகும். இது 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. வாட்ஸ் ஆப் கணக்கை விதிகள் மீறி பயன்படுத்துவதன் மூலம் கணக்கு தடைசெய்யப்படலாம்.

    MORE
    GALLERIES

  • 24

    இந்தியாவில் 47 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்... எதற்காக தெரியுமா?

    இந்தியாவில் மார்ச் மாதத்தில் மட்டும், தொழில்நுட்ப விதிகளின் படி கிட்டத்தட்ட 47 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் 31ம்  தேதி வரை 47 லட்சத்து 15,906 வாட்ஸ் ஆப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. பயனர்களிடமிருந்து எந்த ஒரு ரிப்போர்ட்டும் வருவதற்கு முன்பே, இவற்றில் 16 லட்சத்து 59,385 கணக்குகள் தடை செய்யப்பட்டு உள்ளன என்று வாட்ஸ் ஆப் அதன் மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 34

    இந்தியாவில் 47 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்... எதற்காக தெரியுமா?

    அறிக்கையின் படி, இந்தியாவில் மார்ச் மாதத்தில், 4,720 புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவற்றில் 585 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து வாட்ஸ் ஆப் நிறுவன செய்தி தொடர்பாளர் பேசுகையில், வாட்ஸ் ஆப் பயனர்கள் அதனைத் தவறாமல் பயன்படுத்துவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 44

    இந்தியாவில் 47 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்... எதற்காக தெரியுமா?

    இதற்கிடையில், நம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான சமூக ஊடக பயனர்களுக்கு உரிமை வழங்கும் விதத்தில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர்  ராஜீவ் சந்திரசேகர் அண்மையில் குறைகள் மேல்முறையீட்டுக் குழுவை (GAC) தொடங்கி உள்ளார். இது வாட்ஸ் ஆப் உள்ளடக்கம் மற்றும் வாட்ஸ் ஆப் பயன்பாட்டால் ஏற்படக் கூடிய பிற சிக்கல்கள் தொடர்பான பயனர்களின் கவலைகளை ஆராய்ந்து தக்க தீர்வு காண உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES