புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடந்த 18-ம் தேதி ஒரு சமூகத்தை இழிவாக பேசிய விவகாரம் தொடர்பாக கலவரம் வெடித்தது. இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கடந்த 19-ம் தேதி காலை முதல் இன்று வரை பொன்னமராவதி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தற்கொலைக்கு முயற்சித்த காவலர் நந்தினியின் செல்போனை போலீசார் சோதனை செய்தபோது அதில் அவர் தனது தற்கொலைக்கு ரைட்டர் தான் காரணம் அவரது அறையில் முன்பாகவே நான் தற்கொலைக்கு முயற்சிபேன் என்ற 11 நொடி ஆடியோ ஒன்று பதிவாகியுள்ளது. அதைக் கைப்பற்றிய போலீஸார் அந்த ஆடியோ குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.