தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அட்டைத்தாரர்களுக்கு ஆண்டுதோறும் வேட்டி, சேலை, பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். அதனுடன் பொங்கல் வைக்க தேவைப்படும் தேவையான அரசி, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்களுடன் கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலைமையிலான அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை வழங்கியது.
வரும் 2023 பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க உள்ள பொங்கல் தொகுப்பு குறித்து மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்ந ஆலோசனை கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கூட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள் வழங்கலாம்? ரொக்க பணம் வழங்குவது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் அமைச்சர் சக்கரபாணி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரவை ஆலை முகவர்களுடன், பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டும் அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்த போது பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அமைச்சர் சக்கரபாணியிடம் பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, தலைமைச்செயலகத்தில் நடந்த கூட்டத்தில் பொங்கலுக்கு என்ன பொருட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டன? எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார் என்று சக்கரபாணி பதில் அளித்தார்.
இதனால் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கம் விரைவில் அறிவிக்கப்பட உள்து. தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,000 வழங்குவது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியகாத நிலையில் அமைச்சரின் பதிலால் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்க பணம் பெற உள்ள ரேஷன் அட்டைத்தார்க்ள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.