முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » உஷார்... ஹெல்மெட் அணியும் போது இதை மறந்தால் ரூ.2000 அபராதம்

உஷார்... ஹெல்மெட் அணியும் போது இதை மறந்தால் ரூ.2000 அபராதம்

Helmet Fine | பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அணிவதில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

  • 15

    உஷார்... ஹெல்மெட் அணியும் போது இதை மறந்தால் ரூ.2000 அபராதம்

    நாடு முழுவதும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு அவசியம் கருதி அரசு ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தின் படி, சாலைகளில் ஹெல்மெட் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தமிழகத்தில் கடந்த திங்கட் கிழமை முதல் இருசக்கர வாகனத்தில் பின்புறத்தில் உட்கார்ந்து பயணம் செய்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்று 3000-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    உஷார்... ஹெல்மெட் அணியும் போது இதை மறந்தால் ரூ.2000 அபராதம்

    இந்நிலையில், ஹெல்மெட் அணியும் நபர்கள் அதை முறையாக அணிகிறார்களா அல்லது ஏனோ தானோ என அணிகிறார்களா என்பதை பொருத்து அவர்களுக்கு அபராதம் விதிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி, மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து ஹெல்மெட்டை முறையாக அணியவில்லை என்றாலும் அந்த வாகன ஓட்டிகளுக்கு ரூ.2,000 இனி அபராதம் விதிக்கப்படும்.

    MORE
    GALLERIES

  • 35

    உஷார்... ஹெல்மெட் அணியும் போது இதை மறந்தால் ரூ.2000 அபராதம்

    யாருக்கெல்லாம் இனி அபராதம் : ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.2,000 அபராதம். வாகன ஓட்டி ஹெல்மெட்டை அணிந்து, அதற்கான buckle( லாக் முடிச்சை) அணியவில்லை என்றால் அவருக்கு ரூ.1,000 அபராதம். BSI Bureau of Indian Standards) தரச்சான்று இல்லாத ஹெல்மெட் அணிந்தால் அந்த நபருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். ட்ராபிக் சிக்னலில் விதிமுறைகளை பின்பற்றாமல் நிற்காமல் செல்லும் நபர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.

    MORE
    GALLERIES

  • 45

    உஷார்... ஹெல்மெட் அணியும் போது இதை மறந்தால் ரூ.2000 அபராதம்

    ஹெல்மெட் அணியும் நபர்கள் அதன் buckleஐ அணிவது கட்டாயம் ஆகும். ஒருவேளை விபத்து ஏற்படும் பட்சத்தில் ஹெல்மெட்டை ஒழுங்காக அணியவில்லை என்றால் அது பறந்து சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். எனவே, அதிகபட்ச பாதுகாப்புக்கு தலையில் ஒழுங்கான விதத்தில் ஹெல்மெட் அணிவது அவசியம்.

    MORE
    GALLERIES

  • 55

    உஷார்... ஹெல்மெட் அணியும் போது இதை மறந்தால் ரூ.2000 அபராதம்

    பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் அபராதத்தில் இருந்து தப்பிக்க, பக்கிள் அணியாமல் வெறுமனே ஹெல்மெட் அணிவதை ட்ராபிக் காவலர்கள் கவனித்து அறிக்கை அளித்த நிலையிலேயே இந்த புது கட்டுப்பாட்டை அரசு விதித்துள்ளது.

    MORE
    GALLERIES