வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (Source: AP)
2/ 9
ஆம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கரையை கடந்து விட்ட நிலையில் வெப்பத்தின் தாக்கம் ஆனது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக வட தமிழக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியிருந்தது.
3/ 9
இந்நிலையில் இன்று முதல் வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4/ 9
வட தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் 11 மணி முதல் மூன்று முப்பது வரை காரணமின்றி வெளியே வரவேண்டாம் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
5/ 9
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6/ 9
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
7/ 9
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடற்கரையில் காற்றின் வேகம் மணிக்கு 40 - 50 கி.மீ வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8/ 9
கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் வனமாதேவி பகுதியில் 4செ.மீ மழையும், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. (கோப்புப் படம்)
9/ 9
சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக இருக்கும். அதிகபட்ச வெப்ப நிலையாக 42 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்ப நிலையாக 30 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.