கடந்த ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு இருந்ததுடன் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டது.
2/ 4
தற்போது அறிவிக்கப்பட்டிருந்த புதிய தளர்வில் ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்த தளர்வுகள் வாபஸ் பெறுவதாகவும் வழக்கம்போல கடைகள் இயங்கவும் வாகன போக்குவரத்து மேற்கொள்ளவும் அரசு அறிவித்திருந்தது.
3/ 4
இதையடுத்து, திருச்சி மாநகரில் புத்தூர், காந்தி மார்கெட் மீன் சந்தைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதுடன், முண்டியடித்துக்கொண்டு அவர்கள் மீன்களை வாங்கிச் சென்றனர். அதேபோன்று கறிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
4/ 4
மேலும், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வழக்கம்போல கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றதுடன் சாலைகளில் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இயங்கி வருகின்றன.