தருமபுரி மாவட்டத்தில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில், பத்தாயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த மாதங்களில், கிலோ 8 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி, தற்போது 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கொரோனா ஊரடங்கு தளர்வு அளித்த பின் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். திருமணம், சுப நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கியுள்ளதால், காய்கறிகளின் தேவையும் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.