சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், விளையாட்டு துறைக்கு எப்போவுமே அம்மாவின் அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதும் தடகள வீராங்கனை கோமதி விரும்புகிற அளவுக்கு அவருக்கு உதவி செய்ய அம்மாவின் அரசு தயாராக இருக்கிறது என்று கூறினார்.