தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும்பொருட்டு துபாய் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அந்நாட்டிற்கான இந்திய துணைத்தூதர் அமன் பூரி வரவேற்றார்
2/ 5
192 நாடுகள் பங்கேற்கும் பல்தொழில் கண்காட்சி துபாயில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு அரசு கைத்தறி, விவசாயம், சிறுதொழில், பெருந்தொழில் உள்ளிட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன. இந்த அரங்குகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
3/ 5
இதற்காக இன்று தனி விமானத்தில் மு.க.ஸ்டாலின் துபாய் புறப்பட்டு சென்றார். அவரை துபாய் நாட்டிற்கான இந்திய துணைத்தூதர் அமன் பூரி வரவேற்றார்.
4/ 5
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணத்திற்காக துபாய் அரசு வழங்கிய பிஎம்டபிள்யூ வாகனத்தில் அவர் விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார்.
5/ 5
துபாயில் சர்வதேச தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளார்.