இதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 தேதியுடன் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை வளாகம் நூற்றாண்டு கண்டுள்ளதை குறிப்பிட்டு குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோரின் வாழ்த்துக் கடிதங்கள் மலரில் இடம் பெற்றுள்ளது. மேலும், பேரவை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்று பேசிய உரையும் உள்ளது.
இதே போல முன்னாள் முதலைச்சர்கள் காமராசர், பக்தவச்சலம், எம்.ஜி.ஆர் ஆகியோரின் உரைகளும், தமிழ்நாடு என்று பெயர் மாற்ற குறித்த தீர்மானம் உள்பட சட்டப்பேரவையில் இடம் பெற்ற வரலாற்று சிறப்பு நிகழ்வுகளும், தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மலரில் இடம் பெற்று உள்ளது. நூற்றாண்டு கண்ட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள், சட்டங்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலும், 16 வது சட்டமன்ற பேரவையின் அமைச்சரவை தகவல்களும் மலரில் தொகுக்கப்பட்டுள்ளது.