முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » ஃப்ரூட் மிக்ஸர் குடித்த பெண்களுக்கு வாந்தி, மயக்கம் - 18 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

ஃப்ரூட் மிக்ஸர் குடித்த பெண்களுக்கு வாந்தி, மயக்கம் - 18 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

ஆரணி அருகே நிலத்தில் வேலை செய்த குழந்தை உட்பட 18 பேர் ஜீஸ் குடித்ததால் வாந்தி மயக்கம் வயிற்கு போக்கு ஏற்பட்டு  அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். (செய்தியாளர் : மோகன்ராஜ், ஆரணி)

  • 14

    ஃப்ரூட் மிக்ஸர் குடித்த பெண்களுக்கு வாந்தி, மயக்கம் - 18 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

    தமிழகத்தில் கோடை சித்திரை பருவகாலத்தில் மாவட்டத்தில் அதிகளவில் நெல் விவசாயம் செய்வதும் அதிகளவில் பயிறுடுவது வழக்கம். களம்பூர் பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக விளங்கி வருகின்றன. இதனால் விவசாய நிலத்தில் தற்போது நாட்டுநடவு உள்ளிட்ட விவசாய பணிகள் நடைபெறுவது வழக்கம் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 24

    ஃப்ரூட் மிக்ஸர் குடித்த பெண்களுக்கு வாந்தி, மயக்கம் - 18 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மலையம்பட்டு கிராமத்தை சேர்ந்த குமரேசன் என்பவரின் நிலத்தில் நேற்று அதே கிராமத்தை சேர்ந்த சுமார் 24பெண்கள் நாட்டுநடவு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அப்போது மதியம் வேலை நேரத்தில் களம்பூர் பேரூராட்சியில் உள்ள உள்ளுர் ஜீஸ் கடையிலிருந்து ஜீஸ் வாங்கி வந்து நாட்டு நடவு பணியில் ஈடுபட்ட பெண்களுக்கு கொடுத்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 34

    ஃப்ரூட் மிக்ஸர் குடித்த பெண்களுக்கு வாந்தி, மயக்கம் - 18 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

    இதனையொடுத்து இன்று விடியற்காலை மற்றும் காலையில் நிலத்தின் உரிமையாளர் குமரேசன் நிலத்தில் நடவு பணி செய்த சிவரஞ்சினி, தமிழ்செல்வி, மஞ்சுளா, கன்னியம்மாள், பூங்காவனம், ரேவதி, ஜெயா, மகாலட்சமி, சஞ்சய் (9),  ப்ரீத்திஷா (13), விஜயலட்சுமி உள்ளிட்ட 18பேருக்கு வாந்தி மயக்கம் வயிற்றுபோக்கு உடல்நிலை பாதிப்பு உள்ளிட்டவைகள் ஏற்பட்டு மலையம்பட்டு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.

    MORE
    GALLERIES

  • 44

    ஃப்ரூட் மிக்ஸர் குடித்த பெண்களுக்கு வாந்தி, மயக்கம் - 18 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

    இதனையொடுத்து மேல்சிகிச்சைக்காக சஞ்சய், ப்ரீத்திஷா, தமிழ்செல்வி உள்ளிட்ட 13பேர் ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து களம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜீஸ் கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    MORE
    GALLERIES