வைத்திய வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
2/ 7
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், 10 நாள் சித்திரை , பிரம்மோற்சவ விழா , கொடியேற்றத்துடன் துவங்கியது.
3/ 7
அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி வடக்கு ராஜவீதி 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
4/ 7
திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, காலை 4:45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது .
5/ 7
அதை தொடர்ந்து, பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக உற்சவர் வீரராகவர் தங்க சப்பரத்தில், வீதியுலா வந்தார் . மாலை, சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
6/ 7
வரும், 15ம் தேதி வரை, 10 நாட்கள் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில், வீரராகவர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
7/ 7
பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் கருட சேவைஇன்று காலை நடைபெற்றது. அதிகாலை நான்கு மணிக்கு கோபுர தரிசனமும் அதனைத் தொடர்ந்து பிரம்மோற்சவத்தின் 7ம் நாள் வருகிற 12-ஆம் தேதி வீரராகவர் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது. 14ஆம் தேதி தீர்த்தவாரியும் ஆள் மேல் பல்லாக்கு ஊர்வலமும் நடைபெற உள்ளது.