வரும், 15ம் தேதி வரை, 10 நாட்கள் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில், வீரராகவர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் கருட சேவை எட்டாம் தேதி காலை நடைபெற உள்ளது. அதிகாலை நான்கு மணிக்கு கோபுர தரிசனமும் அதனைத் தொடர்ந்து பிரம்மோற்சவத்தின் 7ம் நாள் வருகிற 12-ஆம் தேதி வீரராகவர் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது.
வீரராகவர் கோவில் பெரிய தேரை பாதுகாப்புடன் முக்கிய வீதிகளான மாடவீதி, வடக்கு ராஜவீதி உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் மின்சார வயர்களை துண்டித்து விட்டு செல்ல வேண்டிய ஏற்பாடுகளை திருவள்ளூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் தலைமையிலான காவல்துறையினர் முன்னேற்பாடுகளை செய்துள்ளனர். செய்தியாளர் : பார்த்தசாரதி