திருவானைக்காவல் கோயில் யானை அகிலா சேற்று குளியல் போட பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
2/ 5
பஞ்சபூத தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படுவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புநாதர் - அகிலாண்டேஸ்வரி கோயில். யானை வழிபட்டு முக்திப் பெற்ற ஸ்தலம் என்பதால் 'திரு ஆனைக்கா' என்று பெயர் பெற்றது.இத்தகைய சிறப்புமிக்க திருவானைக்காவல் கோயிலில், அகிலா என்ற யானை இறைப் பணியாற்றி வருகிறது.
3/ 5
யானையின் உடல் நலம் பேணும் வகையில் ஏற்கனவே, கோயில் நந்தவனத்தில் உள்ள நடைபாதையில் அகிலா யானை தினமும் நடைபயிற்சி மேற்கொள்கிறது. அதன்பிறகு அதற்கென அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளியல் போடுகிறது.
4/ 5
இந்நிலையில், வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி, நீச்சல் குளம் அருகே யானை அகிலா சேற்று மண்ணில் குளிப்பதற்காக, புதியதாக, 1,200 சதுர அடியில் பள்ளம் ஒன்று தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
5/ 5
சேறும், சகதியுமாக இருக்கும் இதில், யானை அகிலா தினமும் ஆனந்தமாக சேற்றுக் குளியல் போடுகிறது. இதைக்கண்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.