இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சுமார் 7 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்று உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் முககவசம் அணிந்து இருந்தால் மட்டுமே சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆடுகளை வாங்க வந்த முத்தையா என்ற வியாபாரி கூறுகையில் கடந்த 2 ஆண்டுகளை விட இந்தாண்டு ரம்ஜான் பண்டிகை வியாபாரம் நன்றாக இருப்பதாகவும், ஆடுகள் வரத்தும் அதிகம், விலையும் அதிகம், 7 முதல் 8 கோடி வரை வியாபாரம் நடந்து இருக்கலாம் என்றார்.