தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் பிரசித்தி பெற்ற குடவறை கோயிலான கழுகாசலமூர்த்தி கோயில் அமைந்துள்ளது. பக்தர்களால் தென்பழநி என அழைக்கப்படும் இக்கோவில் ஆண்டுதோறும் உலக மக்களின் நன்மை, விவசாயம் செழிக்க வேண்டும், மழை பெய்ய வேண்டும் என்பதற்காக மலர் காவடி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
மயில் காவடி ஆட்டத்தில் பல்வேறு வகையான அசைவுகளை விண்ணை பிளக்கும் இசையுடன் ஆடி காண்பித்து அனைவரையும் கவர்ந்து ஈர்த்தனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்ப அடிகளார், திருப்பனந்தாள் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள், மயிலம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், கோவை, கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள் என முக்கிய ஆதினங்களை சேர்ந்த சுவாமிகள் பங்கேற்று அருளுரை வழங்கி மலர் காவடி ஊர்வலத்தினை தொடங்கி வைத்தனர்.