இரவு நேரத்தின் போது காவல் நிலையத்தில் யாரேனும் உள்ளே வந்தால் உடனடியாக காவல் நிலைய வாசலுக்கு வந்து அங்கு இருக்கக்கூடிய காவலர்களை குரைத்தே கூப்பிடுகிறது. குடும்ப பிரச்சனை காரணமாக காவல்நிலையத்துக்கு வருபவர்கள் குரலை உயர்த்தி வாக்குவாதம் செய்தால் போதும் கடும் கோவத்துடன் அவர்களை நோக்கி குரைத்தே எச்சரிக்கை செய்கிறது இந்த ஒயிட்டி.
மேலும் அங்கு பணிபுரியும் காவலர்கள் பணி முடிந்து இரவு நேரத்தில் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவர்களை வழி அனுப்பும் விதமாக சில தூரம் வாகனத்திற்கு பின்னாலே ஓடிச் செல்கிறது. இந்த ஒயிட்டி, பிஸ்கட் மற்றும் கேக் மிகவும் விரும்பி சாப்பிடுவதாகவும் இதற்காகவே பணிபுரியும் காவலர்கள் அவ்வப்போது கேக் பிஸ்கட் கொடுத்து வருகின்றனர்.