உத்ராயண புண்ணிய கால நிறைவு அமாவாசையான, ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி மகா பிரத்தியங்கராகாளி திருக்கோயிலில் இன்று நடைபெற்ற விசேஷ நிகும்பலா யாகத்தில், ஏராளமானோர் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டு, தரிசனம் செய்து மகிழ்ந்தனர் கும்பகோணம் அருகே ஐவர்பாடி (எ) அய்யாவாடி மகாபிரத்தியங்கிராகாளி எனும் அதர்வனக்காளி நான்கு சிங்கங்கள் பூட்டிய அழகிய ரதத்தில் சிங்கமுகம், 18 கரங்களுடன் லட்சுமி, சரஸ்வதியுடன் காட்சியளிக்கிறார். இத்தலத்திற்கு அகத்திய மாமுனிவர், பஞ்சபாண்டவர்கள், ஸ்ரீ ராமர், லட்சுமணன் ஆகியோர் வந்து வழிபட்டு சென்றுள்ளனர் இக்கோயிலின் எட்டு திக்கிலும் மயானம் அமைந்துள்ளது. இங்கு தல விருட்சமாக விளங்கும் ஆலமரத்தில் ஐந்து விதமான இலைகளை காணலாம். பஞ்சபாண்டவர்கள் வனவாசம் முடித்து நாடு திரும்பும் போது இத்தலத்திற்கு வந்த நிகும்பாலா யாகம் செய்து வழிபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இத்தலத்தில் ஒவ்வொரு அமாவாசையன்றும் நிகும்பலா யாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த யாகத்தில் அதிக அளவில் மிளகாய் மற்றும் நெய் ஊற்றப்படுகிறது எனினும் மிளகாய் நெடி துளிக்கூட வருவதில்லை என்பது இத்தலசிறப்பு. இதற்கென பக்தர்கள் அனைவரும் யாகத்திற்காக மிளகாய் கொண்டு வருவார்கள் இக்காளியை வழிபட்டால் பல்வேறு விதமான சாபம், தோஷம், பில்லி, சூன்யம், பகை, வழக்கு போன்றவை தீரும் என்பது பெரும்பாலவர்களின் நம்பிக்கையாகும் உத்ராயண புண்ணிய கால நிறைவு அமாவாசையான, ஆனி மாத அமாவாசையினை முன்னிட்டு இன்று தண்டபாணி சிவாச்சாரியார் மற்றும் சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற நிகும்பலா யாகத்தில், ஏராளமானோர் சமூக இடைவெளியுடன், கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தும் யாகத்தில் பங்கேற்றும் மகிழ்ந்தனர் தொடர்ந்து உற்சவர் பைரவர் மற்றும் பிரத்தியங்கிராதேவிக்கு சிறப்பு கட அபிஷேகமும் அதனை தொடர்ந்து விசேஷ மலராபிஷேகம் நடைபெற்ற பின்னர் வெண்பட்டு சேலையில் அலங்கரிக்கப்பட்டிருந்த மூலவர் பிரத்தியங்கிரா தேவிக்கு பஞ்சார்த்தியும் செய்யப்பட்டது செய்தியாளர் : ராஜ்குமார், தஞ்சை.