தென்காசி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பற்றிஎரியும் காட்டுத் தீ ... பாதிப்பிற்குள்ளாகும் அரியவகை மரங்கள், விலங்குகள்.. - படங்கள்
Tenkasi | தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான வடகரை பகுதியில் பயங்கர காட்டுத்தீ வனத்துறையினர் தீயை அணைக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வடகரை, கடையநல்லூர், புளியங்குடி பகுதியில் அரியவகை மரங்கள் மற்றும் யானை, மான், கரடி உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
2/ 4
கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மலைப் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது.
3/ 4
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வடகரை முதல் கடையநல்லூர் வரை உள்ள மலைப்பகுதியில் பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
4/ 4
இந்த தீயை அணைப்பதற்கு கடையநல்லூர், குற்றாலம், புளியங்குடி பகுதியில் உள்ள வன ஊழியர்கள் 40க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். செய்தியாளர் : ச.செந்தில், தென்காசி மாவட்டம்