இந்த நிலையில் அந்த பகுதியில் ஆடுமேய்க்க சென்ற பீர் முகம்மது என்ற நபரை ஆயுதங்களால் தாக்கியதாகவும் அதில் பீர்முகமது படுகாயம் அடைந்துள்ளதாகவும் மேற்படி வழக்கு சம்பந்தமாக தென்காசி போலீசார் சாகுல்ஹமீது என்பவரை தீவீரமாக தேடி வந்தனர் எனினும் காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து பொத்தை குளம் பகுதியில் உள்ள சுமார் 50 ஏக்கர் இடத்திற்குள் ஓடி மறைந்து இருந்ததாக தகவல்கள் தெரியவந்தது .
இதையடுத்து பறக்கும் கேமரா வசதியுடன் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தலைமைக்காவலர் முத்துராஜ், மாரியப்பன் குற்றப்பிரிவு காவலர்கள் அருள், கார்த்திக், அலெக்ஸாண்டர், பொன்ராஜ் மற்றும் சவுந்தரராஜ் ஆகியோர் உடனடியாக பச்ச நாயக்கன் பொத்தை அருகில் சென்று தனியாருக்கு சொந்தமான பகுதியில் உதவியுடன் பச்ச நாயக்கன் பொத்தையில் அரிவாளுடன் குளத்தின் நடுவே பதுங்கி இருந்த சாகுல்ஹமீதை சினிமா பாணியில் மிகுந்த சிரமத்துடன் கைது செய்தனர் .