முகப்பு » புகைப்பட செய்தி » சிதம்பரத்தில் லட்டு கொடுத்து தீட்சிதர் சொன்ன வார்த்தை.. சுவையான சம்பவத்தை பகிர்ந்த தமிழிசை

சிதம்பரத்தில் லட்டு கொடுத்து தீட்சிதர் சொன்ன வார்த்தை.. சுவையான சம்பவத்தை பகிர்ந்த தமிழிசை

Tamilisai Soundararajan, : லட்டு மடித்திருக்கும் இந்த காகிதத்தை பாருங்கள் என்று கூறினார். நானும் பிரித்து பார்த்தேன் அதில் என்னுடைய வண்ணப்படம் இடம்பெற்றிருந்த ஒரு செய்தித்தாள்.

 • 14

  சிதம்பரத்தில் லட்டு கொடுத்து தீட்சிதர் சொன்ன வார்த்தை.. சுவையான சம்பவத்தை பகிர்ந்த தமிழிசை

  சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் ஆனி திருமஞ்சனம் உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசனம் செய்வதற்காக சென்றேன். திருக்கோவில் நிர்வாகத்தினர் என்னை கோவிலில் வெளியே வந்து உள்ளே அழைத்துச் சென்று திருமஞ்சனம் நிகழ்வை காண்பதற்காக கோவிலில் ஒரு இடத்தில் அமரச் செய்தார்கள். பொது மக்களின் தரிசனத்திற்கு இடையூறு இல்லாமல் ஓரமாக அமர்ந்து கொண்டு இறைவனை தரிசனம் செய்து கொண்டிருந்தேன்.

  MORE
  GALLERIES

 • 24

  சிதம்பரத்தில் லட்டு கொடுத்து தீட்சிதர் சொன்ன வார்த்தை.. சுவையான சம்பவத்தை பகிர்ந்த தமிழிசை

  இறைவனுக்கு நடைபெற்ற ஒவ்வொரு அபிஷேகத்திற்கு பின்பு இறைவனின் சந்தனம், மாலை போன்றவற்றை அளித்தார்கள். அபிஷேகம் முடிந்தவுடன் சந்தனம், மாலை கொடுத்தார்கள். நிறைவாக இறைவனுக்கு சொர்ணாபிஷேகம் நடைபெற்றது. தங்க காசுகளால் நடைபெற்ற சொர்ணாபிஷேகத்தை மகிழ்ச்சியாக இறைவனை தரிசனம் செய்து கொண்டிருந்தேன்.

  MORE
  GALLERIES

 • 34

  சிதம்பரத்தில் லட்டு கொடுத்து தீட்சிதர் சொன்ன வார்த்தை.. சுவையான சம்பவத்தை பகிர்ந்த தமிழிசை

  லட்டுகளை கொடுத்துவிட்டு தீட்சிதர் என்னிடம் இறைவனின் அருள் உங்களுக்கு முழுவதுமாக உள்ளது இதை உங்களிடம் சொல்வதற்கு மிக ஆனந்தமாக உள்ளது என்றார். எனக்கு ஒன்றுமே புரியாமல் அவரை பார்த்தேன். அப்போது அவர் கூறினார் லட்டு மடித்திருக்கும் இந்த காகிதத்தை பாருங்கள் என்று கூறினார். நானும் பிரித்து பார்த்தேன் அதில் என்னுடைய வண்ணப்படம் இடம்பெற்றிருந்த ஒரு செய்தித்தாள்.

  MORE
  GALLERIES

 • 44

  சிதம்பரத்தில் லட்டு கொடுத்து தீட்சிதர் சொன்ன வார்த்தை.. சுவையான சம்பவத்தை பகிர்ந்த தமிழிசை

  அப்போது தீட்சிதர் என்னிடம் கூறினார் கவர்னருக்கு லட்டு கொடுக்க வேண்டும் என்று ஒரு காகிதம் கொடுங்கள் என்று மற்றொரு தீட்சிதரிடம் கேட்டேன் அவர் கொடுத்த காகிதத்தில் உங்கள் படம் இருந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஆகையால் இந்த லட்டை உங்கள் படத்தோடு உங்களுக்கு தருகிறேன்.இது உங்களுக்கு நடராஜ பெருமான் அருளும் மானசீக ஆசிர்வாதமாக எனக்கு தோன்றியது என்றார். இது ஒரு சுவையான அனுபவம்...

  MORE
  GALLERIES