

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.


தமிழகத்தில் இன்று மட்டும் 59,584 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 23,83,664 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 2,27,688 ஆக அதிகரித்துள்ளது.


கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த பாதிப்பு 3,659 பேர் உயிரிழந்துள்ளனர்.


இன்று மட்டும் சென்னையில் 1,107 பேருக்கும், செங்கல்பட்டில் 365 பேருக்கும், மதுரையில் 346 பேருக்கும், திருவள்ளூரில் 486 பேருக்கும், தூத்துக்குடியில் 381 பேருக்கும், திருநெல்வேலியில் 387 பேருக்கும், விருதுநகரில் 577 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.