தமிழகம் மற்றும் புதுவையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை துவங்குகிறது. (கோப்புப் படம்)
2/ 6
தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 3,371 மையங்களில் 4 லட்சத்து 76,318 மாணவர்கள், 4 லட்சத்து 83,300 மாணவிகள் என 9 லட்சத்து 59, 618 பேர் தேர்வு எழுத உள்ளனர். சென்னையில் மட்டும் 567 மையங்களில் 50,678 பேர் தேர்வு எழுத உள்ளனர். (கோப்புப் படம்)
3/ 6
அவர்களுக்காக சென்னையில் 213 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியை சேர்ந்த 302 பள்ளிகளில் படிக்கும் 16,597 மாணவ மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்காக புதுச்சேரியில் 48 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. (கோப்புப் படம்)
4/ 6
பத்தாம் வகுப்பு தேர்வில் வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை,திருச்சி மற்றும் சென்னை புழல் சிறையை சேர்ந்த 152 கைதிகளும் பங்கேற்கின்றனர். (கோப்புப் படம்)
5/ 6
அவர்களுக்காக புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை சிறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 49,000 ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். (கோப்புப் படம்)
6/ 6
மேலும் 5,500 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வின் போது ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (கோப்புப் படம்)