பிப்ரவரி 19: தமிழக உள்ளாட்சித் தேர்தல்
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி அள்ளியது. அது போல் பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளையும் திமுக கூட்டணி வென்றது.
ஏப்ரல் 26: களிமேடு தேர் தீ விபத்து தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் ஏப்ரல் 26-ம் தேதி இரவு நடைபெற்ற தேர்த் திருவிழாவில், மின்சாரம் தாக்கி மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் பலியாகினர். காயமடைந்த 17-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.
ஜூன் 23: அதிமுக பொதுக்குழு கூட்டம்:
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு இபிஎஸ்-ஒபிஎஸ் இடையே நீரு பூத்த நெருப்பு போல புகைந்து கொண்டிருந்த பகை வெடித்துக் கிளம்பியது. ஜூன் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அந்தப் பொதுக்குழுவில் ஒபிஎஸ் தனது அதரவாளர்களுடன் கலந்து கொண்டார். ஆனால் அங்கு ஏற்பட்ட சலசலப்பால் அவர் ஓபிஎஸ் பொதுக்குழுவை புறக்கணித்து சென்றுவிட்டார். அதிமுவில் கோஷ்டி பூசல் வெளிப்படையாக நடைபெறத் தொடங்கியது.
ஜூலை 11- அதிமுக பொதுக்குழு இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு
ஒபிஎஸ் தரப்பின் கடுமையான எதிர்ப்பையும் மீறி இபிஎஸ் தரப்பினர் நீதிமன்ற அனுமதியுடன் பொதுக்குழுவை கூட்டினர். அதே நேரம் ஒபிஎஸ் தரப்பினது திடீரென சென்று அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றினர். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பினரையே கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பிலும் பலர் தாக்கப்பட்டார்கள். இந்த களேபரத்தை தொடர்ந்து அதிமுக அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதிமுக வெளிப்படையாகவே இரண்டு கோஷ்டிகளாக உடைந்தது. அதே நேரம் இபிஎஸ் தலைமையி்ல் நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதோடு, ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருவருக்கும் இடையே அதிகாரப் போட்டி வேகமெடுக்கத் தொடங்கியது இந்த ஆண்டுதான்.
ஜூலை 28: சர்தேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்கம்
நம்ம சென்னை சர்வதேச அளவில் பேசப்பட்டதற்கு காரணமான ஒலிம்பியாட் சர்வதேச செஸ் போட்டிகள் தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார். தமழிக அரசு சார்பில் சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. மிகச் சிறப்பாக போட்டிகளை நடத்திக் காட்டியது தமிழக அரசு.
செப்டம்பர் 13; எஸ்.பி.வேலுமணி வீட்டில லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது மாநகராட்சி ஒப்பந்தங்கள் ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதற்கு அதிமுக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
செப்ம்டம்பர் 28- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை
தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறி பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை தடை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அந்த அமைப்பின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன.
அக்டோபர் 8 : ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச்சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கத்தில் முன்னள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழக ஆரசு ஆய்வு நடத்தியது. நீதிபதி சந்துரு குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசரச் சட்டத்தை நிறைவேற்றியது தமிழக அரசு. அந்த அவசரச் சட்டதிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார். இந்தச்சட்டம் நவம்பர் 27 ஆம் தேதி காலாவதியானது. இதனையடுத்து நிறைவேற்றப்பட்ட நிரந்தர சட்டம் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
அக்டோபர் 18: அருணா ஜெகதீசன் அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிப்பு
தமிழைகத்தையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஒரு நபர் ஆணையர் அருணா ஜெகதீசனின் அறிக்கை அக்டோபர் 18ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்வத்திற்கு முழுவதும் காவல்துறையே காரணம் என ஆணையத்தின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும், அப்போதைய அரசும், மாவட்ட நிர்வாகமும் காட்டிய மெத்தனமே இதுபோன்ற சம்பவத்திற்கு காரணம் என்றும் அறிக்கை குற்றம் சாட்டியது
அக்டோபர் 19: ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை
ஏகப்பட்ட மர்மங்களை உள்ளடக்கிய முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி தனது அறிக்கையை தாக்கல் செய்தார். சசிகலா, மருத்துவர் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரை குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவுசெய்து நால்வர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையம் அரசுக்குப் பரிந்துரைத்திருக்கிறது.
அக்டோபர் 23: கோவை கார் வெடிப்பு
அதிகாலை கோவையில் திடீரென கார் ஒன்று வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்தது. இதில் காருக்குள் இருந்த ஒருவர் உயிரிழந்தார். பதற்றத்தையும் பதைபதைப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தமிழக போலீசார் விசாரணை நடத்தியது. விசாரணையில் வெளிநாட்டு தீவிரவாத கும்பலுடன் தொடர்புடையவர்கள் இந்த சம்பத்தில் தொடர்பிருக்காலம் என்ற சந்தேகம் எழுந்ததால் இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு முகமை வசம் ஒப்படைக்கப்பட்டது.
நவம்பர் 7 : பத்து விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு செல்லும்
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு வழங்கப்பட்ட 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை பாஜக எந்த அளவிற்கு வரவேற்றதோ, அதே அளவிற்க காங்கிரஸ் கட்சியும் வரவேற்றது. ஆனால் திமுக இந்த தீர்ப்பை கடுமையாக எதிர்த்தது. இந்த தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது என திமுக கடுமையாக சாடியது.
டிசம்பர் 14: உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றார்
திமுக எம்எல்ஏவும், இளைஞரணித் தலைவராகவும் இருந்த உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தன் மீதான விமர்சனங்களுக்கு செயல்கள் மூலம் பதில் சொல்வேன் என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.