இதேபோல், நீலகிரி மாவட்டம், குன்னூரில், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் இப்பகுதியின் முக்கிய நீராதாரமாக ரேலியா அணை விளங்கி வருகிறது. 46 அடி உயரம் கொண்ட இந்த அணையில், போதிய அளவில் நீர் இல்லாததால், குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.