மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள மேலவாணியங்குடி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் ராமநவமி திருநாளை முன்னிட்டு சிறப்பு யாக ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன .
2/ 6
கோவில் மண்டபத்தில் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை வைத்து யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் துவங்கியது.
3/ 6
தொடர்ந்து பல்வேறு யாக ஹோமங்கள் நடைபெற்று யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள் சமர்ப்பித்து மஹா பூர்ணாகுதி அளிக்கப்பட்டன.
4/ 6
பின்னர் கலசத்திற்கு தீபாராதனை காண்பித்து ஸ்ரீ சீரடி சாய்பாபா சுவாமிக்கு பாலால் அபிஷேகம் செய்து வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப் பட்டன.
5/ 6
இதனை அடுத்து வண்ண மலர் மாலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
6/ 6
தொடர்ந்து விநாயகர் மற்றும் சாய்பாபா சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வழிபட்டனர். செய்தியாளர் : சிதம்பரநாதன்