தொடர்ந்து விவசாய தேவைக்கு கண்மாய் நீரை பயன்படுத்தியதாலும் கோடைகாலம் தொடங்கியதாலும் கண்மாயில் நீர் வற்றியது. கிராம ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் அதனை சுற்றியுள்ள ஆத்திரம்பட்டி , மின்னல் குடி, ஊசாடிபட்டி, மந்தி பட்டி ,தேவியான்குளம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கண்மாயில் மீன்களை பிடித்தனர்.