திருத்தணி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் வெள்ளி வேலை பரிசாக அளித்தனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தி வருகிறார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது திமுக தலைவர் முக.க.ஸ்டாலினுக்கு வேத விற்பணர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுகவினர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி வேலை பரிசாக அளித்தனர். பரிசாக அளிக்கப்பட்ட வெள்ளி வேலுடன் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு பயணம் மேற்கொண்டார்.