மே 25-ம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை விழா நடைபெறுகிறது. இதனையொட்டி ஏற்காடு அண்ணா பூங்காவில் 5லட்சம் வண்ண மலர்களை கொண்டு மலர்க் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வண்ண மலர்களை கொண்டு பட்டாம்பூச்சி, மகளிருக்கான இலவச பேருந்து, மேட்டூர் அணை, வள்ளுவர் கோட்டம், மாட்டு வண்டி, குழந்தைகளை கவரும் வகையில் சின்சான் உருவம், மஞ்சப் பை உள்ளிட்ட வடிவங்கள் சுமார் 5 லட்சம் மரங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்காட்டில் தற்போது குளுகுளு வென நிலவும் சீதோஷ்ண நிலை சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் உள்ளது. இதனால் ஏற்காட்டில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக படகு சவாரி செய்து ஏற்காட்டில் அழகை ரசித்து வருகின்றனர்.
தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும் இந்த கோடை விழாவில் ஒவ்வொரு நாட்களும், படகு போட்டி உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகளும், நாய் கண்காட்சி உட்பட பல்வேறு கண்காட்சி அரங்குகளும் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற உள்ளது இதற்கான ஏற்பாட்டினை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் தேவையான குடிநீர் உள்ளிட்த் அடிப்படை வசதி, நடமாடும் கழிப்பிட வசதி போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் : கோகுலகண்ணன் (சேலம்)